வைபவ் சூர்யவன்ஷி மீது அபிஷேக் சர்மாவுக்கு பொறாமை.. ஜிம்பாப்வேக்கு எதிராக 3வது போட்டியிலும் மோசம்
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் மோசமான ஆட்டம் இன்றைய போட்டியிலும் தொடர்ந்தது. ஹராரேயில் நடைபெற்ற தொடரின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில் வெறும் இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. இருப்பினும், ரோகித் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் தொடக்க ஜோடி மீண்டும் ஒருமுறை சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைக்கத் தவறியது. அபிஷேக் சர்மா இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

பிளெஸ்ஸிங் முசரபானியின் ஃபுல்லர் லென்த் பந்து, பிட்ச் ஆன பிறகு பேட்ஸ்மேனை விட்டு விலகிச் சென்றது. அபிஷேக் சர்மா இறங்கி வந்து அதை கவர் திசையில் அடிக்க முயன்றார். ஆனால், பந்து பேட்டின் விளிம்பில் பட, விக்கெட் கீப்பர் எளிதான கேட்ச் பிடித்தார்.
இந்தத் தொடரில் முசரபானி, அபிஷேக் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்வது இது மூன்றாவது முறையாகும். இந்த இடதுகை ஆட்டக்காரர் மூன்று இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து, மூன்று முறையும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். அபிஷேக் சர்மாவின் இந்த மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் விரக்தியடைந்துள்ளனர். அவருக்குப் பதிலாகப் பல வீரர்கள் வாய்ப்புக்காகக் காத்திருப்பதால், அவர் தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டிய நேரம் இது என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சஞ்சு சாம்சனை மட்டும் இந்திய அணி நிர்வாகம் உடனடியாக நீக்கிய நிலையில், அபிஷேக்கிற்கு மட்டும் ஏன் வாய்ப்பு தரப்படுகிறது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வைபவ் சூர்யவன்ஷியை விட தாம் பெரிய ஆள் என்பதை காட்டி கொள்வதற்காக தான் அவர் பேட்டை கண்ட படி சுற்றி ஆட்டமிழப்பதாகவும், அபிஷேக் சர்மாவின் ஈகோவால் தான் அவர் அவுட்டாவுதாகவும் ரசிகர்கள் சாடியுள்ளனர்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் தேர்வாளருமான ஸ்ரீகாந்த், சமீபகாலமாக அபிஷேக் சர்மாவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அபிஷேக் சர்மா அதிரடி ஷாட்களை விளையாடுவதற்கு முன்பு, களத்தில் சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications
