Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அவர்தான் பழைய பாஸ் பேபி.. வைபவ் புது பாஸ் பேபி".. அபிஷேக் சர்மாவை பாராட்டிய அஜய் ஜடேஜா

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவை, முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா "பழைய பாஸ் பேபி" என்று குறிப்பிட்டு வெகுவாகப் பாராட்டியுள்ளார். அதாவது வைபவ் சூர்யவன்ஷிக்கு முன் அவர்தான் ரசிகர்களை கவர்ந்த அதிரடி வீரர் எனக் குறிப்பிட்டு பாராட்டினார்.

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை (சாம்சன் 1, இஷான் கிஷன் 0) இழந்து இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போது அபிஷேக் சர்மா அதிரடி எதிர் தாக்குதல் நடத்தி வெறும் 24 பந்துகளில் 59 ரன்கள் (6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசினார்.

Abhishek Sharma is Old Boss Baby Says Ajay Jadeja After Explosive Fifty Against England

இவருடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (68 ரன்கள்) மற்றும் சிவம் துபே (42 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர்களில் 189/7 ரன்கள் குவித்தது. பின்னர் பெய்த கனமழையால் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யாமலேயே போட்டி கைவிடப்பட்டது.

இப்போட்டியில் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்துப் பேசிய அஜய் ஜடேஜா, "அனைவரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை 'பாஸ் பேபி' என்று அழைத்து வருகின்றனர். ஆனால் அபிஷேக் சர்மாதான் எங்களது பழைய பாஸ் பேபி. அவர் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்த காலம் முதலே இதே அதிரடி ஆட்டத்தைத்தான் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

பந்துகளை சிக்ஸர், பவுண்டரிகளுக்குப் பறக்கவிட அவர் எந்த ஒரு கடினமான முயற்சியும் செய்வதில்லை; அவரது பேட்டிங் டைமிங் மிகவும் இயல்பாக உள்ளது. மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை அடிக்கக்கூடிய திறமை அவரிடம் உள்ளதால், அவருக்குப் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் சவாலாகும்" என்று கூறினார்.

அப்படியே ராகுல் டிராவிட்தான்.. “ஜூனியர் வால்” என நிரூபித்த சமித் டிராவிட்.. ரசிகர்கள் பாராட்டு

அப்படியே ராகுல் டிராவிட்தான்.. “ஜூனியர் வால்” என நிரூபித்த சமித் டிராவிட்.. ரசிகர்கள் பாராட்டு

இந்தத் தொடரில் வைபவ் சூர்யவன்ஷிக்கு விளையாட இன்னும் வாய்ப்பு கிடைக்காத போதிலும், அபிஷேக் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டம் இந்திய ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டி20 போட்டி ஜூலை 4 அன்று மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.

Story first published: Friday, July 3, 2026, 10:01 [IST]
Other articles published on Jul 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+