Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னடா வீடியோ கேம் மாதிரி இந்த அடி அடிக்கிறீங்க.. 35 பந்துகளில் சதம்.. ஆப்பு வைத்த அபிஷேக் சர்மா!

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 15 பந்துகளில் அரைசதம் அடித்து சம்பவம் செய்துள்ளார். இந்த அரைசதத்தில் வெறும் 3 ரன்களை மட்டுமே அபிஷேக் சர்மா ஓடி எடுத்திருக்கிறார். மீதமுள்ள அத்தனை ரன்களையும் சிக்ஸ், பவுண்டரி மூலமாக மட்டுமே எடுத்து மிரட்டி இருக்கிறார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 ஆட்டம் வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களை குவித்தது. இதன்பின் இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி களமிறங்கியது.

Abhishek Sharma

முதல் ஓவரிலேயே 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று வெளுத்து கட்டி 26 ரன்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து 2வது ஓவரில் அபிஷேக் சர்மா 2 சிக்ஸ், பவுண்டரி விளாச, 3வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசி தள்ளினார். 4வது ஓவரில் 4, 6, 6, 4 என்று 15 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன் பின்னரும் அபிஷேக் சர்மா கொஞ்சம் கூட அடங்கவில்லை.

ஓவருக்கு 2 சிக்சர்களை விளாசி, கண் மூடி திறப்பதற்கு 90 ரன்களை எட்டினார். ஒரு கட்டத்தில் 30 பந்துகளுக்குள் சதம் விளாசி அபிஷேக் சர்மா தனது சாதனையை தானே முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் சான்ட்னர் கொஞ்சம் கட்டுக் கோப்புடன் பவுலிங் செய்து அபிஷேக் சர்மா சாதனை செய்வதை தடுத்து நிறுத்தினார்.

சதத்தை நெருங்கிய போது அபிஷேக் சர்மாவின் அதிரடியும் குறைந்தது. இறுதியாக 35 பந்துகளில் அபிஷேக் சர்மா தனது சதத்தை எட்டினார். சதம் விளாசிய பின் வழக்கம் போல் தனது ஸ்டைலில் தியானம் செய்து கொண்டாடினார். டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா அடிக்கும் 11வது சதம் இதுவாகும். இதன் மூலமாக விராட் கோலியின் 10 சதங்கள் சாதனையை முறியடித்துள்ளார்.

Story first published: Tuesday, October 27, 2026, 14:55 [IST]
Other articles published on Oct 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+