Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6000 ரன்கள் அடித்து அபிஷேக் சர்மா பிரம்மாண்ட டி20 சாதனை.. ஆசியாவில் நம்பர் 1.. அதிவேக ரெக்கார்டு

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடி காட்டிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 6,000 ரன்களைக் கடந்த ஆசிய வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது இந்திய அணி. அபிஷேக் சர்மா அசுர வேகத்தில் ரன் குவித்தார். குறிப்பாக, ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் பரூக்கி வீசிய 5-வது ஓவரில் இந்திய அணி 26 ரன்களைக் குவித்து மிரட்டியது இந்திய அணி. இதில் இஷான் கிஷன் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடிக்க, அபிஷேக் சர்மாவும் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார்.

Abhishek Sharma Sets Asian Record in 1st T20I Victory vs Afghanistan Achieves Fastest 6 000 T20 Runs

வெறும் 22 பந்துகளில் அரைசதம் கடந்த அபிஷேக் சர்மா, மொத்தம் 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் குவித்தார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிவேகமாக 6,000 ரன்களைக் கடந்த ஆசிய பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் தன்வசப்படுத்தினார்.

மேலும், இஷான் கிஷன் 42 ரன்கள் சேர்த்த நிலையில், அவருடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு வெறும் 53 பந்துகளில் 121 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் 100 ரன்களுக்கு மேல் சேர்த்த பார்ட்னர்ஷிப்பில், அதிக ரன் ரேட் (13.70) வைத்த ஜோடி என்ற புதிய உலக சாதனையை இவர்கள் படைத்தனர். முன்னதாக 2024-ல் பெங்களூருவில் ரோஹித் சர்மா - ரிங்கு சிங் ஜோடி படைத்த சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர்.

இந்தியாவை சீண்டிப் பார்க்க நினைத்து அவமானப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி.. என்ன நடந்தது?

இந்தியாவை சீண்டிப் பார்க்க நினைத்து அவமானப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி.. என்ன நடந்தது?

இவர்களது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 13.4 ஓவர்களிலேயே 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் 2-வது டி20 போட்டி வரும் செப்டம்பர் 15 அன்றும், 3-வது போட்டி செப்டம்பர் 17 அன்றும் டெல்லியில் நடைபெறவுள்ளது.

Story first published: Monday, September 14, 2026, 7:28 [IST]
Other articles published on Sep 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+