For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மெகா ரெக்கார்டுகளை உடைத்த அபிஷேக் சர்மா.. ஒரே ஆண்டில் டி20 கிரிக்கெட்டின் பல சாதனைகள் உடைப்பு

மும்பை: 2025-ம் ஆண்டு இந்திய டி20 அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மாவுக்கு உச்சகட்ட ஆண்டாக இருந்தது. அவர் தொட்ட பந்து எல்லாமே சிக்ஸருக்கு பறந்தது என சொல்லும் வகையில் ஒரே ஆண்டில் டி20 கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக மாறி இருக்கிறார்.

சர்வதேச டி20, ஐபிஎல், உள்ளூர் போட்டிகள் என அனைத்து டி20 போட்டிகளிலும் ரன் மழை பொழிந்தார். 25 வயதே ஆன அபிஷேக் சர்மா, 2025-ல் மட்டும் முறியடித்த சாதனைகளின் பட்டியல் இதோ -

ஒரு காலண்டர் வருடத்தில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை அபிஷேக் சர்மா நெருங்கினார். விராட் கோலி 2016ல் 1614 ரன்கள் குவித்து இந்த சாதனையை செய்து இருந்தார். அபிஷேக் சர்மா 2025-ல் மட்டும் அனைத்து டி20 போட்டிகளையும் சேர்த்து 1,602 ரன்களை குவித்து 2-வது இடம்பிடித்துள்ளார். வெறும் 13 ரன்களில் கோலியின் சாதனையைத் தவறவிட்டாலும், சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் போன்றவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டார்.

Abhishek Sharma The New Sixer King of 2025 Punjab Sensation Breaks Virat Kohli and Suryakumar Yadav s Records

ரேட்டிங்கில் நம்பர் 1

டி20 சர்வதேச தரவரிசை புள்ளிகளில் இதுவரை டேவிட் மலான் 919 புள்ளிகள் எடுத்து செய்த உலக சாதனையை அபிஷேக் சர்மா சுக்குநூறாக உடைத்தார். 931 புள்ளிகளைப் பெற்று டி20 வரலாற்றிலேயே அதிக ரேட்டிங் புள்ளிகள் பெற்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

200 ஸ்டிரைக் ரேட்!

டி20 வரலாற்றில் 1000 ரன்களுக்கு மேல் குவித்து, 200+ ஸ்ட்ரைக் ரேட்டை வைத்து இருந்த முதல் வீரர் அபிஷேக் சர்மா தான். இந்திய அணிக்காக மட்டும் 193.46 ஸ்ட்ரைக் ரேட்டில் 859 ரன்களை விளாசியுள்ளார். ஒரு வருடத்தில் 1000 ரன்களுக்கு மேல் குவிப்பது சாதனை என்றால், அதை 200-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் அடிப்பது அதைவிட பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச டி20 சாதனைகள் (இந்தியாவுக்காக)

அதிகபட்ச ஸ்கோர்: இங்கிலாந்துக்கு எதிராக 54 பந்துகளில் 135 ரன்கள். (இந்திய வீரரின் அதிகபட்ச டி20 ஸ்கோர் இதுதான்).

மின்னல் வேக அரைசதம்: அதே போட்டியில் 17 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய அளவில் சாதனை.

வேகமான 50 சிக்ஸர்கள்: முழு உறுப்பினர் நாடுகளில், அதிவேகமாக 50 டி20 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பெருமை.

ஐபிஎல் 2025 ஆட்டம்!

ஐபிஎல் 2025 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அபிஷேக் ஆடிய ஆட்டம் எதிரணி பவுலர்களையும் மிரள வைத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 55 பந்துகளில் 141 ரன்கள் குவித்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். மேலும், 40 பந்துகளில் சதம் அடித்தார்.

சையது முஷ்டாக் அலி தொடரிலும் 28 பந்துகளில் சதம் அடித்து அந்த தொடரின் வரலாற்றில் அதிவேக சதம் அடித்து சாதனை செய்தார். பெங்கால் அணிக்கு எதிராக 12 பந்துகளில் அரைசதம் அடித்து மற்றொரு அதிவேக அரைசத சாதனையை சமன் செய்தார். மேலும், ஒரே ஆண்டில் 100 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை செய்தார்.

Story first published: Thursday, January 1, 2026, 16:47 [IST]
Other articles published on Jan 1, 2026
English summary
Abhishek Sharma: The New 'Sixer King' of 2025! Punjab Sensation Breaks Virat Kohli and Suryakumar Yadav's Records
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+