ஜிங்க்சோட அதிரடி சரவெடி இன்னைக்கி போட்டியில நடந்திருக்கு... கோலி பாராட்டு!
மும்பை : இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் நேற்று துவங்கியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 195 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி அந்த ஸ்கோரை கடந்துள்ளது. கேப்டன் அஜிங்க்யா ரஹானேவின் அதிரடி சதம் இதற்கு உதவி புரிந்துள்ளது.
இந்நிலையில் தன்னுடைய குழந்தை பிறப்பிற்காக நாடு திரும்பியுள்ள கேப்டன் விராட் கோலி, ரஹானேவின் சதத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

2வது டெஸ்ட் போட்டி
இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் துவங்கியுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து தன்னுடைய முதல் இன்னிங்சை இந்தியா துவங்கிய நிலையில், முதலில் விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களில் சுருண்டனர்.

நிதானமான ஆட்டம்
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் அஜிங்க்யா ரஹானே, ஜடேஜா உள்ளிட்டோர் நிதானமாக விளையாடி முறையே 104 மற்றும் 40 ரன்களை அடித்துள்ளனர். இதையடுத்து நேற்றைய ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை இந்தியா இன்று கடந்து மேலும் 82 ரன்களையும் அதிகமாக அடித்துள்ளது.

மெல்போர்னில் 2 சதங்கள்
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ரஹானே 4 சதங்களை அடித்துள்ள நிலையில் மெல்போர்னில் மட்டுமே 2 சதங்களை பூர்த்தி செய்துள்ளார். கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழிநடத்திய ரஹானே, பேட்ஸ்மேனாகவும் சதத்தை அடித்து இந்திய அணியை காப்பாற்றியுள்ளார்.
விராட் கோலி பாராட்டு
இந்நிலையில் அஜிங்க்யா ரஹானேவின் இந்த சதத்திற்கு கேப்டன் விராட் கோலி தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இன்றைய சதம் ரஹானாவின் மிகவும் சிறப்பான ஆட்டத்தால் சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அணியின் இன்னொரு சிறப்பான நாள் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications