Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பனியன் போட விடுங்கடா.. கிரிக்கெட்டில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத அரிய காட்சி!

அபுதாபி: கிரிக்கெட் போட்டி ஒன்றில், ஃபீல்டர் ஒருவர் தனது பனியனை மாற்றும் முன்பே பந்து அவரை நோக்கி வந்ததால், அதனை அவர் தவறவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது அபுதாபி டி10 லீக். நிகோலஸ் பூரனின் கொடூர ஆட்டம் டூ வெய்ன் பார்னலின் ஆச்சர்ய ஹாட்ரிக் வரை, எட்ஜ் ஆஃப் தி சீட் மோடில் பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த Gulf கலாட்டா.

abu dhabi t10 fielder changing jersey fails to stop boundary video

இந்நிலையில் நேற்று நடந்த போட்டி ஒன்றின் 'அடக்கடவுளே குட்டி ஸ்டோரி'-யை இங்கு பார்க்கலாம்.

ஒண்ணாந்தேதி அதுவுமாக நேற்று நடந்த தொடரின் 14வது லீக் போட்டியில் டீம் அபு தாபி, நார்தர்ன் வாரியர்ஸ் அணிகள் மோதின.

இதில், அபு தாபி அணியில் விளையாடிய ரோஹன் முஸ்தபா எனும் வீரர், பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். அண்ணனுக்கு வேர்வை தாங்கலயோ என்னவோ, தான் அணிந்திருந்த ஜெர்ஸியை மாற்றி புதிய பனியனை அணிய தயாரானார்.

அப்போது சரியான ராகுகாலம் போல, பேட்ஸ்மேன் பந்தை அவரை நோக்கி அடிக்க, இதை சற்றும் எதிர்பாராத முஸ்தபா, 'ஏண்டா.. என்கிட்ட அடிச்ச?' மோடில், அரைகுறையாக டிரஸ் மாற்றிக் கொண்டே, பந்தை தடுக்க முயன்றும், பந்து 'போவியா அங்குட்டு' என்று பவுண்டரியைக் கடந்தது.

பார்வையாளர்கள், கமென்டேட்டர்கள், வீரர்கள், அம்பயர்கள் என்று அனைவரும் சிரிக்க 'என்னமோ போடா மாதவா' என்று பந்தை தூக்கிப் போட்டுவிட்டு பரிதாபமாக நகர்ந்தார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Story first published: Tuesday, February 2, 2021, 10:55 [IST]
Other articles published on Feb 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+