Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை.. இந்திய ஏ அணியில் சாய் சுதர்சன்.. 3 CSK வீரர்களுக்கு இடம்

மும்பை : ACC Emerging Players எனப்படும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூலை 13ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 8 ஆசிய அணிகள் இரண்டு பிரிவுகளாக பங்கேற்கிறார்கள்.

இதில் இந்திய அணி குரூப் பி பிரிவில் நேபாளம், யுஏஇ மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் விளையாடுகிறது. இதேபோன்று குரூப் ஏ வில் இலங்கை,வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ACC Emerging Players Asia cup - sai sudharsan got place in india a squad

இதில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும். ஜூலை 21ஆம் தேதி அரையிறுதி ஆட்டமும் ,ஜூலை 23ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும்.இந்த தொடர் அனைத்தும் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறுகிறது. வளர்ந்து வரும் வீரர்களுக்கான இந்த தொடரில் இந்திய ஏ அணி கேப்டனாக அண்டர் 19 கேப்டனாக செயல்பட்ட யாஷ் தூல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கும் இந்திய ஏ அணியில் இடம் கிடைத்திருக்கிறது. அபிஷேக் ஷர்மா இந்த தொடரில் துணை கேப்டனாக இருக்கிறார். இதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்த சர்ச்சைக்குரிய இளம் வீரர் ரியான் பராக், பஞ்சாப் அணியில் இடம் பிடித்த பிராப்சிம்ரன் சிங், ராஜஸ்தான் அணியில் இடம் பிடித்த துருவ் ஜூரல் உள்ளிட்டோர் இந்திய ஏ அணியில் இடம் பிடித்துள்ளனர்.

அதேபோன்று சிஎஸ்கே அணியின் இளம் சிங்கங்கள் நிசாந்த் சிந்து, ஆல்ரவுண்டர் ராஜ்வரதன் ஹங்கர்கேகர், ஆகாஷ் சிங் உள்ளிட்ட வீரர்களுக்கும் இந்தத் தொடரில் இடம் கிடைத்திருக்கிறது. இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக சித்தன்சு கோடக் செயல் படுவார், பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜும், பில்டிங் பயிற்சியாளராக முனீஸ் பாலியும் உள்ளனர்.

இந்திய ஏ அணி விவரம் - சாய் சுதர்சன், அபிஷேக் சர்மா, நிகின் ஜோஷ், பிரதோஷ் ரன்சன் பால், யாஷ் துல், ரியான் பராக், நிசாந்த் சிந்து, பிராப்சிம்ரன் சிங், துருவ் ஜூரல், மானவ் சுதர், யுவராஜ்சின் தோதியா, ஹர்சித் ரானா, ஆகாஷ் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ராஜவர்த்தனே ஹங்கர்கேகர்,

கூடுதல் வீரர்கள்- ஹர்ஸ் துபே, நேஹல் வதேரா, ஸ்நேல் பட்டேல், மோஹித் ரெட்கர்

Story first published: Tuesday, July 4, 2023, 19:31 [IST]
Other articles published on Jul 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+