ஆசிய கோப்பை விலகும் பாகிஸ்தான்? போட்டியை நடத்தும் அரேபிய நாடு.. நாளை முக்கிய முடிவு
பஹ்ரைன் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் இருந்து ரத்து செய்யப்படுவது 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் இந்த தொடரை பாகிஸ்தானில் நடத்தினால் இந்திய அணி பங்கேற்காது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதற்கு எச்சரிக்கை கொடுத்த பாகிஸ்தான் ஒருவேளை இந்தியா விலகினால் பாகிஸ்தான் அணி நடப்பாண்டில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் பங்கேற்காது என கூறியது.

ஆலோசனை கூட்டம்
இதனால் பிரச்சனை மேலும் வலுத்தது இந்த நிலையில் ஆசிய கோப்பை குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக பஹைரனில் நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க ஜெய்ஷா பஹ்ரைன் சென்றுள்ளார். இந்த கூட்டத்தில் பாகிஸ்தானில் ஏன் ஆசிய கோப்பை நடத்தக்கூடாது என்பது குறித்து உறுப்பினர் நாடுகள் கருத்து தெரிவிக்க உள்ளனர்.

யார் நடத்துகிறார்கள்?
மேலும் பாகிஸ்தானுக்கு பதில் வேறு எந்த நாட்டில் போட்டிகளை நடத்தலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்த போட்டியை நடத்த அண்மையில் உலகக் கோப்பை கால்பந்து தொடரை வெற்றிகரமாக நடத்தும் நிறுத்திய கத்தார் விருப்பம் தெரிவித்தது. எனினும் கடந்து முறை போல் இம்முறையும் ஐக்கிய அரபு நாடுகளில் ஆசிய கோப்பை நடத்த அனைத்து நாடுகளும் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

ஜெய்ஷா உறுதி
ஆசிய கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் கொடுக்கும் அழுத்தத்திற்கு பாகிஸ்தான் அடிப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை பாகிஸ்தானில் தான் போட்டி நடைபெறும் என்றால் இந்தியா இந்த தொடரில் பங்கேற்காது என்பதை ஜெயிஷா உறுதியுடன் தெரிவிக்க உள்ளார்.

எந்த மாதம்
இந்தக் கூட்டத்தில் ஆசிய கோப்பை தொடர்கான தேதியும் முடிவெடுக்கப்படும். இலங்கையை போல் பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால் அங்கு இவ்வளவு பெரிய தொடரை நடத்துவது சாத்தியம் இல்லை என்றும் கூறப்படுகிறது. நடப்பாண்டு உலகக்கோப்பை நடைபெற உள்ளதால் ஆசியக் கோப்பைத் தொடர் 50 ஓவர் போட்டிகளாக இம்முறை நடைபெறும்.


Click it and Unblock the Notifications