Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி - பாபர் அசாம் ஒரே அணியில்.. இரு நாடுகளை இணைக்க புதிய திட்டம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

மும்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முக்கிய வீரர்கள், ஒரே அணியில் இணைந்து ஆடுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

Recommended Video

Afro Asia Cup பிரமாண்ட Cricket தொடர் விரைவில்! ரசிகர்கள் மகிழ்ச்சி | *cricket

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தனிப்பட்ட தொடரில் மோத வேண்டும் என்ற கோரிக்கை தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் பிரச்சினைகள் காரணமாக கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு தனிப்பட்ட தொடரில் மோதுவதே இல்லை.

 மகிழ்ச்சியான செய்தி

மகிழ்ச்சியான செய்தி

இந்நிலையில் அதற்கான வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது. ஆனால் சற்று வித்தியாசமாக இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்து விளையாடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளில் தான் தற்போது வாரியங்கள் களமிறங்கியுள்ளன.

சிறப்பு ஏற்பாடு

சிறப்பு ஏற்பாடு

ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து நடத்தும் "ஆஃப்ரோ ஆசிய கோப்பை" என்ற பிரபல தொடர் மீண்டும் வரவுள்ளது. வரலாற்றில் இதுவரை 2005 மற்றும் 2007ம் ஆண்டுகளில் இந்த தொடர் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு உள்நாட்டு தொடர்கள் வந்துவிட்டதால், இது காணாமல் போய்விட்டது. இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினையும் இதற்கு முக்கிய காரணம் தான். இது மீண்டும் கொண்டு வரப்படவுள்ளது.

அதிகாரியின் அறிவிப்பு

அதிகாரியின் அறிவிப்பு

இதுகுறித்து பேசியுள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி பிரபாகரன், அனைத்து அணிகளுக்கும் ஆஃப்ரோ ஆசிய கோப்பை தொடர் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் கிரிக்கெட் வாரியங்களிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. அவை வந்துவுடன் பிரமாண்ட முறையில் இந்த தொடர் நடத்தப்படும்.

 பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சி

பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சி

இந்திய அணியுடன் போட்டி போட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல முறை பிசிசிஐ-க்கு நேரடியாக ரமிஷ் ராஜா கோரிக்கை வைத்துள்ளார். தற்போது அதனைவிட பெரிய விஷயம் நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Story first published: Sunday, June 19, 2022, 11:45 [IST]
Other articles published on Jun 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+