Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தை உலக சாம்பியனாக்கியவர்.. ஆஷஸ் தொடரில் இல்லை..! ரசிகர்கள் ஷாக்

Recommended Video

Ashes Series 2019 | Jofra Archer | ஜோப்ரா ஆர்ச்சர்,ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் இல்லை- வீடியோ

லண்டன்: இங்கிலாந்துக்கு உலக கோப்பையை பெற்று தந்தவர்களில் ஒருவரான ஜோப்ரா ஆர்ச்சர் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதும் ஆஷஸ் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடர் ஆகும். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் துவங்குகிறது.

ஆஷஸ் தொடருக்கான இரு அணி வீரர்களின் பட்டியலும் கடந்த வாரம் அந்தந்த அணி நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்டது. இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டன.

துணை கேப்டன் பொறுப்பு

துணை கேப்டன் பொறுப்பு

முதல்முறையாக பென் ஸ்டோக்சுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. உலக கோப்பை 2ம் பாதியில் காயம் காரணமாக அவதிப்பட்டு வலி நிவாரணி எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆடிய ஜோப்ரா ஆர்ச்சர், ஆஷஸ் தொடரில் ஒரு சில போட்டிகளில் ஆட மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் அவரை அணியில் எடுத்துள்ளனர்.

காயத்தால் அவதி

காயத்தால் அவதி

அருமையாக பவுலிங்கை வெளிப்படுத்தி வரும் ஆர்ச்சர், முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது துரதிர்ஷ்டவசமாகி போனது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பட்டியல் வெளியிடப்பட்ட போது, முதல் 11 வீரர்களில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை.

உடல்தகுதி இல்லை

உடல்தகுதி இல்லை

அவரது காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அதேபோல் உடல் தகுதியும் முழுமை அடையவில்லை. தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக அவரை அணியில் நிர்வாகம் எடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீரர்கள் விவரம்

வீரர்கள் விவரம்

இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்: ரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட் (கேப்டன்), ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பெயர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Story first published: Wednesday, July 31, 2019, 21:54 [IST]
Other articles published on Jul 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+