Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

600 ரூபாய் இருந்தா கிரிக்கெட் வீரராகி இருப்பேன்.. இர்பான் கான் வாழ்க்கையை மாற்றிய அந்த சம்பவம்!

மும்பை : ஏப்ரல் 29 அன்று மறைந்த பாலிவுட் நடிகர் இர்பான் கான் உண்மையில் தன் இளமையில் கிரிக்கெட் வீரராகவே ஆசைப்பட்டுள்ளார்.

Recommended Video

Rohit Sharma Birthday special | Story of Rohit Sharma in Tamil

எனினும், 600 ரூபாய் இல்லாததால் அவரால் கிரிக்கெட் வீரராக முடியவில்லை. பின்னர் நடிகராக மாறினார்.

பின்னர் ஒரு பேட்டியில் தான் நடிகர் ஆனது தான் நல்ல முடிவு என்றும் அவர் கூறி உள்ளார்.

ஹாலிவுட் வரை புகழ்

ஹாலிவுட் வரை புகழ்

இர்பான் கான் இந்திய சினிமா உலகில் திறமையான நடிகர்களில் ஒருவர். ஹாலிவுட் வரை அவரது நடிப்புத் திறமை சென்று சேர்ந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் கூட அவர் நடித்து இருந்தார்.

புற்றுநோய் பாதிப்பு

புற்றுநோய் பாதிப்பு

அவருக்கு கடந்த இரு ஆண்டுகளாக புற்றுநோய் இருந்தது. அதற்கான சிகிச்சைகள் எடுத்து வந்த அவரது, உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 29 அன்று பெருங்குடல் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிரிக்கெட் வீரர் இர்பான்

கிரிக்கெட் வீரர் இர்பான்

அவரை நடிகராக மட்டுமே பலரும் அறிந்து இருந்த நிலையில், அவர் தன் இளமையில் கிரிக்கெட் வீரராக இருந்ததும், அதற்கான முக்கியமான கட்டத்தில் அவரிடம் 600 ரூபாய் இல்லாததால் அவர் கிரிக்கெட் கனவை கைவிட்டதாகவும் கூறி உள்ளார்.

ரூபாய் 600 கட்டணம்

ரூபாய் 600 கட்டணம்

இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரர் இடம் பெறும் முன் பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் தங்களை நிரூபிக்க வேண்டும். அதில் முக்கியமான தொடர் சிகே நாயுடு ட்ராபி தொடர். அதில் பங்கேற்க ரூபாய் 600 கட்டணம் கட்ட முடியாத நிலையில் இருந்துள்ளார் இர்பான் கான்.

ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

இது பற்றி இர்பான் கான் கூறுகையில், "நான் கிரிக்கெட் ஆடினேன். கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என விரும்பினேன். ஜெய்ப்பூரில் நான் ஆல் ரவுண்டர். என் அணியில் நான் தான் இளையவன். கிரிக்கெட்டில் முன்னேற வேண்டும் என நினைத்தேன்" என்றார்.

600 ரூபாயை கேட்க முடியவில்லை

600 ரூபாயை கேட்க முடியவில்லை

மேலும், "அப்போது நான் சிகே நாயுடு தொடருக்கு தேர்வு செய்யப்பட்டேன். அதற்கு எனக்கு பணம் தேவைப்பட்டது. அந்த பணத்தை யாரிடம் கேட்பது என எனக்கு தெரியவில்லை. அந்த நாளில் என்னால் கிரிக்கெட் ஆட முடியாது என நான் முடிவு செய்தேன். என்னால் அன்று 600 ரூபாயை கேட்க முடியவில்லை" என்றார் இர்பான் கான். இர்பான் கான்

தேசிய நாடகப் பள்ளி

தேசிய நாடகப் பள்ளி

அதன் பின் தேசிய நாடகப் பள்ளியில் சேர முயன்றுள்ளார் அதற்கு ரூபாய் 300 தேவைப்பட்டுள்ளது. அதை தன் சகோதரியிடம் பெற்றுத் தான் அதில் சேர்ந்ததாக கூறினார் இர்பான் கான். எனினும், நடிகரானது தான் சிறந்த முடிவு என அவர் கூறினார்.

11 வீரர்கள் தான்

11 வீரர்கள் தான்

"கிரிக்கெட்டை விட்டது நான் தெரிந்தே எடுத்த முடிவு தான். மொத்த நாட்டிலும் மொத்தமே 11 வீரர்கள் தான் உள்ளனர். ஆனால், நடிகர்கள் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. நடிப்பதற்கு வயது கட்டுப்பாடும் இல்லை" என்றார் இர்பான் கான்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகர்

டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகர்

இர்பான் கான் டெஸ்ட் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர். அவருக்கு டி20 போட்டிகள் பிடிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டியின் வசீகரம் மற்றும் நாடகத்துடன் ஒப்பிட்டால், டி20 போட்டிகள் இந்த விளையாட்டை சீரழித்து வருகிறது என ஒருமுறை கூறினார் இர்பான் கான்.

Story first published: Thursday, April 30, 2020, 13:23 [IST]
Other articles published on Apr 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+