Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கு ஓய்வு கொடுங்க.. வாகனிடம் மல்லுக்கட்டி பல்பு வாங்கிய காமெடி நடிகர் சதீஷ்

Recommended Video

IPL 2019: Vaughan replies satish | நடிகர் சதீஷுக்கு மைக்கேல் வாகன் பதில்- வீடியோ

மும்பை: கோலிக்கு ஓய்வு கொடுங்கள் என்ற வாகனின் யோசனையை புரிந்து கொள்ளாமல் நடிகர் சதீஷ் செய்த டூவிட் காமெடியாக மாறிவிட்டது.

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இனி வெற்றி பாதையில் நடந்தாலும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியுமா என்று தெரியவில்லை.

அணியின் இந்த தொடர் தோல்விகள் கோலியின் தன்னம்பிக்கையை பாதிக்கலாம். இந்தியாவின் உலக கோப்பை கனவுக்கும், தற்போதைய சூழலுக்கும் நல்லதல்ல என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துகளை கூறி இருந்தனர்.

வாகனின் டுவிட்டர்

இந் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகனும் டுவிட்டரில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

ஓய்வு வேண்டும்

ஓய்வு வேண்டும்

இந்திய அணி சமயோஜிதமாக திட்டமிட வேண்டும். வர உள்ள உலக கோப்பை தொடருக்காக இப்போதே கோலிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அந்த தொடர் மிகப் பெரிய போட்டி. ஆகையால், அவருக்கு ஓய்வு தர வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

சதீஷ் கருத்து

வாகனின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பதிவிடப்பட்டன. டுவிட்டரில் காமெடி நடிகர் சதீசும் ஒரு கருத்தை கூறியிருந்தார். அவர் கூறியிருந்ததாவது:

அவசியம்

அவசியம்

அன்புள்ள வாகன் அவர்களே, இந்த தோல்வி எங்கள் ஸ்கிப்பர் கோலியை சோர்வடைய செய்துவிடாது. எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதின் அவசியம் தெரியும்.

அறிவுரை வேண்டாம்

அறிவுரை வேண்டாம்

எங்கள் தல தோனி அவருக்கு வழிகாட்ட இருக்கிறார். அதனால், நீங்கள் உங்கள் வீரர்களுக்கு அறிவுரை சொல்வது நலம். எங்களுக்கு அறிவுரை சொல்லி நேரத்தை விரயமாக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

மீண்டும் பதில்

மீண்டும் பதில்

அதற்கு வாகன் மிக பொறுமையான பதில் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அவர் கூறியதாவது: சதீஷ்.. நான் ஒரு சின்ன அறிவுரை கொடுக்கவே முயன்றேன். நிறைய போட்டிகளில் விளையாடுபவர் ஆண்டுக்கு ஒருமுறையாவது ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும்.

கோலியும் மனிதர் தான்

கோலியும் மனிதர் தான்

அதிலும், குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓய்வு எடுக்கலாம். இப்போது பெங்களூரு அணியால் சரியாக விளையாட முடியாத நிலை இருக்கிறது. இப்போது கோலி ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். கோலியும் மனிதர் தான். அவருக்கும் சில ஓய்வு தேவைப்படுகிறது என்று விளக்கமளித்தார்.

பதில் கூறிய சதீஷ்

பதில் கூறிய சதீஷ்

ஆனால் அவரின் இந்த பதிவையும் விடவில்லை. அதற்கு பதில் அளித்திருக்கிறார். சதீஷ் கூறியிருப்பதாவது: வாகன், உங்கள் அக்கறையை ஏற்றுக் கொள்கிறேன்.

அபார திறமை

அபார திறமை

நாங்கள் எங்கள் ஸ்கிப்பர் மீது கொண்டுள்ள நம்பிக்கையை போலவே இந்த தோல்வி அவர் உற்சாகத்தை குறைக்காது என்றும் நம்புகிறோம். கோலி, அபார திறமை கொண்டவர் என்று பதிவிட்டிருந்தார்.

வைரலான டுவிட்டர்

வைரலான டுவிட்டர்

வாகன், நடிகர் சதீஷ் இடையேயான இந்த டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி இருக்கிறது. அதிலும் கூட வாகன் என்ன கூறியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளாமல் நடிகர் சதீஷ் பதிலளித்துள்ளார்.

சதீஷ் காமெடி

சதீஷ் காமெடி

அதாவது காமெடி நடிகர் சதீஷ், கோலி இப்படி ஆடியதால் எங்களுக்கு இழப்பு இல்லை. எங்களுக்கு தோனி இருக்கார் என்று கூறி இருந்தார். ஆனால், மைக்கேல் வாகனோ, கோலிக்கு ஆதரவாக தான் ட்வீட் செய்தார் என்பதை உணர்ந்த சதீஷ் அந்த டீவீட்டை நீக்கினார்.

Story first published: Monday, April 8, 2019, 15:26 [IST]
Other articles published on Apr 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+