Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய் ரசிகர்கள் ஒரே குஷி… ஆசிய கோப்பை இந்தியா, ஹாங்காங் போட்டியில் அப்படி போடு சாங்

துபாய் : ஆசிய கோப்பை தொடரில் நேற்று இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா போராடி தான் வென்றது. இந்தியா முதலில் 285 ரன்கள் குவித்தது. 300ஐ தாண்டும் என நினைத்த நேரத்தில், கடைசி சில ஓவர்கள் இந்தியா மோசமாக ஆடியது. அடுத்து இலக்கை துரத்திய கத்துக்குட்டி அணியான ஹாங்காங் இந்தியாவுக்கு நீண்ட நேரம் ஆட்டம் காட்டி கடைசி பத்து ஓவர்களில் தான் கொஞ்சம் ஓய்ந்தது.

இந்த போட்டியில் நேற்று நடிகர் விஜய் படத்தின் பாடல்கள் ஹாங்காங் விக்கெட்கள் வீழ்ச்சியின் இடையே போடப்பட்டது. அதை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அப்படி போடு

நேற்று 41வது ஓவரை இந்தியாவின் சாஹல் வீசினார், அப்போது ஹாங்காங் அணியின் பாபர் ஹாயாத் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, நடிகர் விஜய் நடித்த கில்லி படத்தின் "அப்படி போடு" பாடல் ஒலிபரப்பானது.

டாடி மம்மி

அடுத்து நடிகர் விஜய் நடித்த வில்லு படத்தில் இருந்து "டாடி மம்மி" பாடல் ஒலிபரப்பானது. அதையும் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

ஆசிய கோப்பையில் விஜய் பாடல்கள்?

ஆசிய கோப்பையில் விஜய் பாடல்கள்?

ஆசிய கோப்பை தொடர் துபாயில் நடக்கிறது. அங்கே இந்தியர்கள் குறிப்பிட்ட அளவு வசிக்கிறார்கள். அதிலும் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம். அவர்கள் தமிழ் பாடல்களை ரசிப்பார்கள் என்ற அடிப்படையில் நேற்று இந்தியா ஆடிய போட்டியில் நடிகர் விஜய் படத்தில் இருந்து பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு இருக்கலாம்.

2014 ஆசிய கோப்பையில்

இதற்கு முன் 2014 ஆசிய கோப்பை வங்கதேசத்தில் நடந்த போதும் சில தமிழ் பாடல்கள் ஒலிபரப்பாகின. அப்போது இந்தியா ஆடிய போட்டிகள் அனைத்திலும் பல இந்திய திரைப்பட பாடல்கள் ஒலிபரப்பாகின. அதில் நடிகர் விஜய் பட பாடல்கள் உட்பட பல தமிழ் பாடல்களும் அடங்கும்.

Story first published: Wednesday, September 19, 2018, 11:18 [IST]
Other articles published on Sep 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+