பும்ராவுடன் காதலா…? டேட்டிங்கா..? ஓபனாக அறிவித்த பிரபல தென்னிந்திய நடிகை..!! பரபரத்த ரசிகர்கள்
டெல்லி: இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ராவுடன் காதலா ? டேட்டிங்கா என்று பிரபல நடிகை அனுபமா பதில் கூறியிருக்கிறார்.
தென்னிந்தியாவின் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த சில நாட்களாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி வைரலானது. உண்மையில் இவர்கள் இருவரும் காதலர்கள் என்று கூட கதைகள் தாறுமாறாக பரவின.
இந் நிலையில் பும்ரா குறித்தும், இந்த விவகாரம் குறித்தும் முதன் முறையாக வாய் திறந்துள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அவர் கூறியதாவது: பும்ரா ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே எனக்கு தெரியும். இதுவரை நான் அவரை சந்தித்ததே இல்லை.

உண்மையில்லாத செய்தி
அவரை காதலிப்பதாக பரவும் செய்தியில் உண்மையில்லை. அது முற்றிலும் பொய்யானது. சமூக வலைத்தளங்களில் பிரபலங்களை பின்தொடர்வது என்பது மிகவும் சாதாரண விஷயம் அதுபோன்றே பும்ராவின் வலை தளத்தில் லைக் செய்தேன். இந்த வதந்திக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பிரேமம் படம்
மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா. இந்த படத்தில் மலர் டீச்சருக்கு பின்னர் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை அனுபமா தான். தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழி ரசிகர்களையும் அந்த படம் கவர்ந்தது.

வைரல் செய்தி
அதே நேரத்தில், அனுபமா பும்ராவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி வைரலானது. பேட்டிங்கில் கலக்கும் இந்திய அணிக்கு, பந்துவீச்சில் வலுசேர்த்து இன்று நம்பர் 1 பவுலராக இருப்பவர் பும்ரா.

சந்தேகம் தந்த ஸ்டேட்டஸ்
பும்ராவுடன் அனுபமா இணைத்து பேசப்பட்டதிற்கு காரணமே இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் பும்ராவின் ஸ்டேட்டஸ் அனைத்திற்கும் அனுபமா டுவிட்டரில் லைக் செய்து வந்தது தான். அதேபோல் பும்ராவும் விட்டபாடில்லை.

உண்மை தெரிந்தது
அவரும், அனுபமாவின் ஸ்டேட்டஸ் அனைத்திற்கும் லைக்குகளை அள்ளி வீசி இருக்கிறார். அதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார் என்று செய்திகள் வெளி வரத்தொடங்கின. தற்போது அதன் உண்மையான நிலவரமும் வெளியாகி விட்டது.


Click it and Unblock the Notifications