ஹர்பஜன் சிங்கோடு திருமணம் எப்போது?: நடிகை கீதா பஸ்ரா விளக்கம்
மும்பை: கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் எப்பொழுது திருமணம் என்பது குறித்து பாலிவுட் நடிகை கீதா பஸ்ரா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகைகளுக்கும், கிரிக்கெட்டுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. காரணம் பல பாலிவுட் நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை காதலித்தார்கள், காதலித்து வருகிறார்கள். அதில் பலரும் பரபரப்பாக பேசுவது கிரிக்கெட் வீர்ர கோஹ்லி, அனுஷ்கா சர்மா காதல் பற்றி தான்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங்கின் காதலியான பாலிவுட் நடிகை கீதா பஸ்ரா தனது திருமணம் பற்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
என் திருமணம் எப்பொழுது நடந்தாலும் அது பற்றி நிச்சயம் உங்களுக்கு தெரிய வரும். எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் பேச விரும்புவது இல்லை. இருப்பினும் நான் ஹர்பஜன் சிங்கை திருமணம் செய்துகொள்ளப் போவதாக தினமும் 20 செய்திகள் வருகின்றன. அது நடக்கும்போது நான் கூறுகிறேன்.
நான் தற்போது செகண்ட் ஹேண்ட் ஹஸ்பன்ட் படத்தில் பஞ்சாபி பெண்ணாக நடித்துள்ளதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications