Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களோட இந்திய அணிக்கு ப்ளூ கலர் ஜெர்சியே குடுங்க.. கொளுத்தி போட்ட ரஜினி பட நாயகி

எட்ஜ்பாஸ்டன்: மீண்டும் இந்திய அணிக்கு ப்ளூ கலர் ஜெர்சியே வேண்டும் என்று காலா பட நாயகியான ஹிமா குரேஷி டுவீட் ஒன்றை தட்டிவிட்டிருக்கிறார்.

உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைய காரணம் அவர்கள் அணிந்த காவி நிற உடை தான் என்ற பிரச்சாரங்கள் இன்னும் முடிந்த பாடில்லை. இணையத்தில் இன்னும் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.

Actress hima qureshi wants blue jersy for india

நான், நீ என்று அநியாயத்துக்கு ரசிகர்கள் கமெண்டுகளை அள்ளித் தெளித்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தியா தோல்வியடைந்ததால் அது காவி நிறத்தின் மகிமை என்று குரல்கள் எழுந்தன. நடப்பு உலக கோப்பை தொடரில் இதுவரை தோற்காத இந்தியா, 27 ஆண்டுகளாக உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்திடம் தோற்காத இந்தியா தற்போது தோற்று போயிருக்கிறது.

இதற்கு காரணம் இந்த காவி நிற ஜெர்சி தான் என்று ஆளாளுக்கு அடித்து கிளப்பி விட்டிருக்கின்றனர். சாதாரண ரசிகர் மட்டுமல்ல... அரசியல் பிரபலங்களும் காவி சமாச்சாரத்தை கையில் எடுத்துக் கொண்டு பேசியிருக்கின்றனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர், இந்தியாவின் தோல்விக்கு காரணம் காவி நிற ஜெர்சி தான் கருத்து கூறியிருக்கிறார்.

தற்போது அது போன்று காவி நிற எதிர்ப்பை பிரபல நடிகையும், ரஜினிகாந்தின் காலா பட நாயகியுமான ஹீமா குரேஷி வெளிப்படுத்தி இருக்கிறார். இந்திய அணிக்கு மீண்டும் ப்ளூ நிற ஜெர்சியே வேண்டும் என்று அவர் டுவிட்டை தட்டி விட்டிருக்கிறார்.


அந்த பதிவில், அவர் கூறியிருப்பதாவது: இப்படி கேட்பது மூட நம்பிக்கை எல்லாம் இல்லை...எங்களுக்கு மறுபடியும் ப்ளூ ஜெர்சிதான் வேணும்... போதும்... அவ்வளவு தான் என்று பதிவிட்டிருக்கிறார். அவரது கருத்துக்கு ஆதரவும் கருத்துகளும் வந்து விழுந்திருக்கின்றன.
Story first published: Monday, July 1, 2019, 14:23 [IST]
Other articles published on Jul 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+