Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த நேரத்தில் அது முக்கியமா?.. ரிஷப் பண்ட் -ன் மோசமான நிலைமை.. ஊர்வசி ரவுத்தேலா போட்ட மறைமுக பதிவு!

ரூர்கி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-க்கு கார் விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா போட்டுள்ள பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இன்று காலை கிரிக்கெட் உலகிற்கு அதிர்ச்சி தந்த விஷயம் ரிஷப் பண்ட்-ன் கார் விபத்து தான். உத்தர்காண்ட்-ல் இருந்து டெல்லி நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்த அவர் திடீரென விபத்தில் சிக்கினார்.

தீ பற்றி எரிந்த அந்த காரில் இருந்து தப்பித்த ரிஷப் பண்ட், உடனடியாக உள்ளூர் வாசிகளின் உதவியோடு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இரவு முழுவதும் ஒற்றையாளாக காரை ஓட்டிச்சென்ற போது, தூக்க கலக்கம் ஏற்பட்டு கார் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பண்ட்-க்கு தலை, கால், முதுகுப்பகுதி என பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

ஊர்வசியின் பதிவு

ஊர்வசியின் பதிவு

இந்நிலையில் பண்ட்-க்கு வேண்டாதவராக பார்க்கப்பட்டு வரும் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவும் மறைமுக பதிவை செய்துள்ளார். அதாவது மகா ராணியை போன்ற வேடத்தில் இருக்கும் தனது புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், பிரார்த்திக்கிறேன் எனக்குறிப்பிட்டு ஒரு வெள்ளை இதயம் மற்றும் புறா ஆகியவற்றின் எமோஜியை பதிவிட்டுள்ளார்.

யார் ஊர்வசி ரவுத்தேலா

யார் ஊர்வசி ரவுத்தேலா

ரிஷப் பண்ட் தன்னை காதலித்ததாகவும், தனக்காக பலவற்றை செய்துள்ளதாகவும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா மறைமுகமாக கூறியிருந்தார். இதற்கு ரிஷப் பண்ட் , விளம்பரத்திற்காக எது வேண்டுமானாலும் சொல்கிறார்கள், யாரும் நம்பாதீர்கள் எனக்கூறினார். இருவரும் இப்படி மாறி மாறி சமூக வலைதளங்களில் மோதி பிரச்சினை தீராமலேயே உள்ளது. பண்ட் -காக ஊர்வசி அவ்வபோது செய்யும் விஷயங்களை மறைமுகமாக கூறி வருவார். அதே போன்று தான் தற்போது அவருக்காக பதிவிட்டுள்ளார்.

பண்ட் உடல்நிலை

பண்ட் உடல்நிலை

இது ஒருபுறம் இருக்க, ரிஷப் பண்ட்-ன் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளன. அதில், பண்ட்-க்கு தலை மட்டும் கை, கால்களில் பெரியளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் எலும்பு முறிவு எதுவும் அவருக்கு ஏற்படவில்லை. ஆங்காங்கே காயங்கள் உள்ளதால், முழுமையாக குணமடைய குறைந்தது 6 மாதங்கள் வரை ஆகும் எனக்கூறப்பட்டுள்ளது.

Story first published: Friday, December 30, 2022, 17:09 [IST]
Other articles published on Dec 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+