Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“மன நலம் பாதிச்சிருச்சா”.. பண்ட் குறித்து லெஜெண்ட் நடிகை செய்த விஷயம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

ரூர்கி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில் ஊர்வசி ரவுத்தேலா செய்துள்ள விஷயம் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் தற்போது டேராடூன் மருத்துவமனையில் இருந்து மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லபப்ட்டுள்ளார். அங்கு பிசிசிஐ மற்றும் மருத்துவமனையின் குழுக்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோகிலா பென் மருத்துவமனையின் மருத்துவக்குழு மற்றும் பிசிசிஐ-ன் மருத்துவக்குழு இணைந்து பண்ட்-ன் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

பெரிய காயம்

பெரிய காயம்

ரிஷப் பண்ட்-க்கு எந்தவித எலும்பு முறிவு ஏற்படவில்லை என்றாலும் காலில் மூட்டுப்பகுதியிலும், கணுக்கால் பகுதியிலும் தசைநார்கள் கிழிந்துள்ளன. அதற்காக 2 அறுவை சிகிச்சைகளையும் செய்தே தீர வேண்டும். தசை நார் கிழிவு பெரிதடைந்து வருவதால் முழுமையாக குணமடைய 9 - 10 மாதங்களுக்கு மேல் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்வசி சீண்டல்

ஊர்வசி சீண்டல்

இந்நிலையில் பண்ட்-க்கு வேண்டாதவராக பார்க்கப்பட்டு வரும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா எல்லை மீறி வம்பிழுத்து வருகிறார். முன்னதாக மகா ராணியை போன்ற வேடத்தில் இருக்கும் தனது புதிய புகைப்படத்தை பதிவிட்ட அவர், பிரார்த்திக்கிறேன் எனக்குறிப்பிட்டு ஒரு வெள்ளை இதயம் மற்றும் புறா ஆகியவற்றின் எமோஜியை பதிவிட்டுள்ளார்.

தற்போதைய பதிவு

தற்போதைய பதிவு

தற்போது இன்னும் ஒருபடி மேல் சென்றுள்ளார். கோகிலா பென் மருத்துவமனையின் வெளிபுற கட்டடத்தை பிளாக் அண்ட் வைட் புகைப்படமாக பதிவிட்டிருக்கிறார். இதே மருத்துவமனையில் தான் ரிஷப் பண்ட் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார். ஒருவேளை பண்ட்-ஐ காண ஊர்வசி சென்றாரா என்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன.

யார் ஊர்வசி ரவுத்தேலா

யார் ஊர்வசி ரவுத்தேலா

ரிஷப் பண்ட் தன்னை காதலித்ததாகவும், தனக்காக பலவற்றை செய்துள்ளதாகவும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா மறைமுகமாக கூறியிருந்தார். இதற்கு ரிஷப் பண்ட் , விளம்பரத்திற்காக எது வேண்டுமானாலும் சொல்கிறார்கள், யாரும் நம்பாதீர்கள் எனக்கூறினார். இருவரும் இப்படி மாறி மாறி சமூக வலைதளங்களில் மோதி பிரச்சினை தீராமலேயே உள்ளது. பண்ட் -காக ஊர்வசி அவ்வபோது செய்யும் விஷயங்களை மறைமுகமாக கூறி வருவார். அதே போன்று தான் தற்போது அவருக்காக பதிவிட்டுள்ளார்.

Story first published: Saturday, January 7, 2023, 13:58 [IST]
Other articles published on Jan 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+