Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன கில்கிறிஸ்ட்!! இந்திய பௌலிங்கை பத்தி இப்படி சொல்லிட்டீங்க.. நீங்க சொல்றது தான் உண்மையோ!?

மெல்போர்ன் : இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அங்கே டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது இந்திய அணி.

இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் இந்திய வேகப் பந்துவீச்சு பற்றி தன் கருத்துக்களை தெரிவித்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணி

இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணி

இப்போதுள்ள இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு கூட்டணி தான் இதுவரை இந்திய கிரிக்கெட்டில் சிறந்த கூட்டணி என கருதப்படுகிறது. தற்போதுள்ள இந்திய பந்துவீச்சு டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் 20 விக்கெட்களையும் வீழ்த்தும் திறன் பெற்றதாக இருக்கிறது.

எதுவும் சொல்ல முடியாது

எதுவும் சொல்ல முடியாது

இந்த நிலையில், கில்கிறிஸ்ட் இப்போதைக்கு இந்திய அணியின் பந்துவீச்சு பற்றி எதுவும் சொல்ல முடியாது எனக் கூறி இந்திய பந்துவீச்சு மீது தனக்கு இருக்கும் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய பந்துவீச்சுப் புதிர்

இந்திய பந்துவீச்சுப் புதிர்

"இந்திய பந்துவீச்சு இங்கிலாந்தில் சில தருணங்களில் சிறப்பாக செயல்பட்டது. அவர்கள் திறன் வாய்ந்தவர்களாகவும், வேகம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் (இப்போதுள்ள பந்துவீச்சு கூட்டணி) ஆஸ்திரேலியாவில் இதுவரை குழுவாக பங்கேற்றதில்லை. இந்த தொடரிலேயே இது தான் புதிராக இருக்கும்" எனவும் கூறியுள்ளார் கில்கிறிஸ்ட்.

இந்திய பந்துவீச்சு உண்மையில் எப்படி?

இந்திய பந்துவீச்சு உண்மையில் எப்படி?

இந்தியாவை பொறுத்தவரை வேகப் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், பும்ரா சிறப்பாக வீசி வருகின்றனர். சுழற்பந்துவீச்சில் சாஹல், குல்தீப் யாதவ், டெஸ்ட் அணிக்கு அஸ்வின் இருக்கின்றனர். இவர்கள் தவிர உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கலீல் அஹ்மது நன்றாக பந்து வீசினாலும் புதிய வீரர். கில்கிறிஸ்ட் இந்திய பந்துவீச்சை நம்பமுடியாது என்பதை போல பேசி இருப்பது இந்திய ரசிகர்களை பயமுறுத்துவது போல இருந்தாலும், ஒரு வகையில் இதுவும் உண்மையே. குறிப்பாக கூடுதல் பந்துவீச்சாளர் இல்லாத இந்திய அணி பந்துவீச்சில் இன்னும் சமநிலையை அடையவில்லை. மேலும், இந்திய பந்துவீச்சு கூட்டணி என்றால் எந்த ஐந்து வீரர்கள் எனக் கேட்டால் யாருக்கும் தெரியாது. அந்த அளவு ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் மாற்றி மாற்றி பயன்படுத்தப்படுகிறார்கள்.

Story first published: Saturday, November 17, 2018, 19:39 [IST]
Other articles published on Nov 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+