மும்பை: ஐபிஎல் வரலாற்றில் சிறந்த வீரர்கள் அடங்கிய ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்திருக்கிறார். அந்த அணியில் விராட் கோலிக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக இருக்கும் விராட் கோலிக்கு ஆடம் கில்கிறிஸ்ட் இடம் அளிக்காதது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் பாபர் அசாம் தனது உலகின் சிறந்த டி20 அணியைத் தேர்வு செய்தபோது அதில் விராட் கோலிக்கு இடம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்துள்ள அணியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளைச் சேர்ந்த பல வீரர்கள் இடம் பிடித்திருக்கின்றனர்.

இந்த இரண்டு அணிகளும் சேர்த்து மொத்தம் பத்து ஐபிஎல் கோப்பைகளை வென்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்துள்ள ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்தவர். அவர் அணியில் சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இரண்டு சிஎஸ்கே ஜாம்பவான் வீரர்களும் இடம் பிடித்திருக்கின்றனர். குறிப்பாக விராட் கோலி இடத்தில் சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்து இருக்கிறார்.
மேலும், அந்த அணியில் ஐந்து மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு இடம் அளித்திருக்கிறார். அவர்கள் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், கிரண் பொல்லார்ட், லசித் மலிங்கா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா. இவர்களைத் தவிர சுனில் நரேன், டேவிட் வார்னர் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கும் இடம் அளித்து இருக்கிறார்.
ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்த ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணி வீரர்கள் பட்டியல்: