Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆத்தி..இப்படி கூடவா நடக்கும்? ஆடம் ஜாம்பா எடுத்த டி.ஆர்.எஸ்.. அதிர்ச்சி தந்த பால் ட்ராக்கிங் முடிவு

மெல்பேர்ன்: இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியின் போது ஆடம் ஜம்பா எடுத்த டி.ஆர்.எஸ் முடிவு ரசிகர்களை ஆச்சரியத்தில் உறையவைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய சூழலில் நேற்று 3வது போட்டி நடந்தது.

இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியை 221 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. மேலும் 3 - 0 என்ற கணக்கில் வைட் வாஷ் செய்து வழி அனுப்பியது.

ஆச்சரிய சம்பவம்

ஆச்சரிய சம்பவம்

இந்நிலையில் இந்த போட்டியில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது, இங்கிலாந்து இன்னிங்ஸின் போது ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் லியாம் டாவ்சன் எல்.பி.டபள்யூ ஆகவிருந்தார். லெக் ப்ரேக்காக போடப்பட்ட அந்த பந்தை ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற போது அது, பேடில் பட்டது. எனினும் அதற்கு அம்பயர் அவுட் கொடுக்க மறுக்க, ஆஸ்திரேலிய அணி ரிவ்யூவ் கேட்டது.

 கடைசி நேர ட்விஸ்ட்

கடைசி நேர ட்விஸ்ட்

தான் அவுட் என்பதை உணர்ந்துக்கொண்ட டாவ்சன் முடிவு வருவதற்கு முன்னதாகவே ஹெல்மெட்டை கழட்டிவிட்டு நடையை கட்டினார். ஆஸ்திரேலிய வீரர்களும் கூடி பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஒட்டுமொத்தமாக ட்விஸ்ட் கொடுத்தது டி.ஆர்.எஸ். முடிவு. அதாவது லெக் ஸ்டம்பிற்கான லைனில் பட்ட அந்த பந்து, ஆஃப் சைடில் திரும்பி, ஆஃப் சைடையும் ( முதல் ஸ்டம்ப் ) தாண்டி வெளியே சென்றதாக காட்டப்பட்டது. இதனால் அவுட்டும் வழங்கப்பட்டது.

 எப்படி இது சாத்தியம்?

எப்படி இது சாத்தியம்?

ஷேன் வார்னே வீசிய பந்து லெக் சைடில் பட்டு, ஆஃப் ஸ்டம்ப்பை பதம் பார்த்ததே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதனையும் தாண்டி ஜாம்பா வீசிவிட்டாரா என ரசிகர்கள் ஐசிசி-யை கிண்டல் செய்து வருகின்றனர். இதனை களத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்களே, எப்படி சாத்தியம்? என்ற எண்ணத்துடன் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். பேட்ஸ்மேனும் சிரித்தபடியே மீண்டும் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். கள அம்பயர்கள் என்ன சொல்வது என தெரியாமல் திகைத்து நின்றனர்.

இங்கி,க்கு அதிர்ஷ்டமா

இங்கி,க்கு அதிர்ஷ்டமா

எனினும் ஆட்டம் முழுவதும் இங்கிலாந்துக்கு அதிர்ஷ்டம் இருக்கவில்லை. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா மழையின் காரணமாக 48 ஓவர்களில் 355 - 5 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 142 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்து மோசமாக தோற்றது. சமீபத்தில் டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து, அதற்கு அடுத்த தொடரிலேயே வைட் வாஷ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 23, 2022, 13:05 [IST]
Other articles published on Nov 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+