Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடம் சாம்பாவின் மன்கட் விக்கெட்.. ஆனால் நாட் அவுட் தந்த அம்பயர்கள்.. காரணம் கேட்டு வியந்த ரசிகர்கள்!

மெல்பேர்ன்: இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை போன்றே பிக் பேஷ் லீக் போட்டியில் ஆடம் சாம்பா செய்த போதும், பேட்ஸ்மேனுக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டதால் மன்கட் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரபல உள்நாட்டு தொடரான் பிக்பேஷ் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய லீக் ஆட்டத்தில் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்பேர்ன் ரினிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதல் இன்னிங்ஸில் 19.4 ஓவர்கள் வீசப்பட்டு கிட்டத்தட்ட இலக்குகள் உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி வீரர் ஆடம் சாம்பா இங்கு தான் சுவாரஸ்ய சம்பவத்தை அரங்கேற்றினார்.

சாம்பா மன்கட் விக்கெட்

சாம்பா மன்கட் விக்கெட்

இன்னிங்ஸின் கடைசி ஓவரை ஆடம் சாம்பா தான் வீசினார். அப்போது 5வது பந்தை மேக்கன்ஸி ஹார்வே எதிர்கொள்ள நான் ஸ்ட்ரைக்கர் திசையில் டாம் ரோஜர்ஸ் இருந்தார். அப்போது சாம்பா பந்துவீசுவதற்கு முன்பாகவே ரோஜர்ஸ் கிரீஸை விட்டு வெளியேறியதால் உடனடியாக மன்கட் முறையில் ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். மேலும் அம்பயரிடம் அப்பீல் கேட்டுவிட்டு தைரியமாக சென்றார்.

நாட் அவுட்

நாட் அவுட்

இதனையடுத்து களத்தில் இருந்த நடுவர் 3வது நடுவருக்கு பரிந்துரைத்தார். வீடியோவை நன்கு பார்த்த போது, சாம்பா பந்துவீசுவதற்கு முன்னதாகவே ரோஜர்ஸ் வெளியேறியது தெரியவந்தது. ஆனால் அவருக்கு நாட் அவுட் என முடிவை கொடுத்தார் 3வது நடுவர். இது மைதானத்தில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எப்படி இதற்கு நாட் அவுட் கொடுத்தனர் என்பது புரியாமல் திகைத்தனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

இதுகுறித்து விளக்கமளித்த நடுவர்கள், ஆடம் சாம்பா பந்துவீசுவது போல முழுமையாக கையை கொண்டு சென்றுவிட்டு, பின்னர் வந்து ஸ்டம்பிங் செய்துள்ளார். பந்து அரைவட்டமாக கொண்டு செல்வதற்கு முன்னதாகவே கைகளை நிறுத்தி ஸ்டம்பிங் செய்ய வேண்டும். அதாவது பந்துவீசுவதற்கு முன்னதாகவே பேட்ஸ்மேன் வெளியேறிவிட்டார் என அவுட்டாக்கப்படுகிறார். அதே போல பவுலர் முழுமையாக பந்துவீசுவதற்கு முன்பாக ஸ்டம்பிங் செய்ய வேண்டும். அப்போது தான் அது மன்கட். இல்லையெனில் பந்துவீச வந்துவிட்டு, அதனை ரத்து செய்தது போல மாறிவிடும் எனக்கூறியுள்ளனர்.

அஸ்வினின் பார்ட் 2

அஸ்வினின் பார்ட் 2

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஆடம் சாம்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இதே அணியில் தான் ரவிச்சந்திரன் அஸ்வினும் இருக்கிறார். ஜாஸ் பட்லரும் இதே அணி தான். எனவே மூன்று மன்கட் புகழ்கள் ஒரே அணியில் இணைந்து கலக்கி வருகின்றனர் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

யாருக்கு வெற்றி

யாருக்கு வெற்றி

மன்கட் பிரச்சினைகளை தாண்டியும் இந்த போட்டியில் வெற்றி கண்டது ரோஜர்ஸின் அணி தான். முதலில் பேட்டிங் செய்த மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்களை எடுத்து இருந்தது. 142 எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆடம் சாம்பாவின் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

Story first published: Tuesday, January 3, 2023, 18:44 [IST]
Other articles published on Jan 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+