Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் டெஸ்ட்: வார்னர் சதம்.. 354 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா!

அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. டோணி உடல் தகுதியுடன் இல்லாததால் இன்றைய டெஸ்டில் விளையாடவில்லை.

அஸ்வினுக்கு கல்தா

அஸ்வினுக்கு கல்தா

இதனால் வீராட்கோஹ்லி கேப்டனாக டெஸ்டில் அறிமுகமானார். விர்த்திமான் சாகா விக்கெட் கீப்பராக களம் கண்டார். இஷாந்த் சர்மா, முகமது ஷமி, வருண் ஆரோன் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் கரண் சர்மா ஆகிய சுழற்பந்து வீரருடன் இந்தியா களம் இறங்கியது. அஸ்வின் கழற்றிவிடப்பட்டு அவருக்கு பதிலாக கரண் சர்மா அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

டாசில் வென்ற ஆஸி.

டாசில் வென்ற ஆஸி.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தலைவர் மைக்கேல் கிளார்க் தனது அணி முதலில் மட்டை வீசும் என்று அறிவித்தார். வார்னரும், ரோஜர்சும் தொடங்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இஷாந்த் சிறப்பான தொடக்கம்

இஷாந்த் சிறப்பான தொடக்கம்

வார்னர் தொடக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வருண் ஆரோன், ஷமி பந்தை விளாசினார். ஆனால், இஷாந்த் சர்மா தொடக்க ஜோடியை பிரித்தார். தனது 2வது ஓவரில் அவர் ரோஜர்ஸ் விக்கெட்டை (9 ரன்கள்) கைப்பற்றினார். அப்போது அணியின் ஸ்கோர் 50ஆக இருந்தது.

பவுன்சரில் தடுமாறிய வாட்சன்

பவுன்சரில் தடுமாறிய வாட்சன்

அடுத்து வாட்சன் களமிறங்கினார். இஷாந்த்சர்மா பவுன்சர்களாக வீசி அவரை அச்சுறுத்தினார். வாட்சன் 14 ரன்னில் ஆரோன் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 88ஆக இருந்தது. 3வது விக்கெட்டுக்கு வார்னருடன் கிளார்க் ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடை வேளைக்கு பிறகு வார்னர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

அதிரடி சதமடித்த வார்னர்

அதிரடி சதமடித்த வார்னர்

106 பந்துகளில் 14 பவுண்டரியுடன் அவர் 100 ரன்னை தொட்டார். 33வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 10வது சதம் ஆகும். இந்தியாவுக்கு எதிராக 2வது சதத்தை பதிவு செய்தார். இதேபோல் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கும் இந்திய பந்துவீச்சை விளாசி தள்ளினார். அவர் 69 பந்தில் 8 பவுண்டரியுடன் அரை சதத்தை தொட்டார்.

கிளார்க் ஓய்வு

கிளார்க் ஓய்வு

இதனிடையே கிளார்க் 60 ரன்களில் முதுகு வலி காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். 145 ரன்கள் குவித்த வார்னரை கரண் சர்மா வீழ்த்தினார். இறுதி நேரத்தில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா இன்றைய ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்களை எடுத்தது.

கடைசி ஓவரில் விக்கெட்

கடைசி ஓவரில் விக்கெட்

ஆரோன் மற்றும் ஷமி இரு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். ஆட்ட நாளில் கடைசி ஓவரில் ஆஸி.விக்கெட் கீப்பர் ஹேடின் விக்கெட்டை ஷமி வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அணிகள் விவரம்

அணிகள் விவரம்

இந்திய அணி விவரம்: விராட்கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், புஜாரா, ரோகித்சர்மா, ரகானே, விர்த்திமான் சாகா, கரண்சர்மா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, வருண் ஆரோன்.

ஆஸ்திரேலியா: மைக்கேல் கிளார்க் (கேப்டன்), டேவிட் வார்னர், வாட்சன், சுமித், மிச்சேல், மார்க், பிரட் ஹாடின், மிச்சேல் ஜான்சன், பீட்டர்சிடில், ரியான் ஹாரிஸ், லயன்.

Story first published: Tuesday, December 9, 2014, 15:05 [IST]
Other articles published on Dec 9, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+