Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிலெய்ட்டில் இருக்கும் டாஸ் சாபம்.. இந்தியாவுக்கு பலன் அளிக்குமா? ஹர்திக் பாண்டியா சொல்வது என்ன?

அடிலெய்ட் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன் மூலம் முதலில் பேட்டிங் செய்ய உள்ள இந்திய அணி 180 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே இங்கிலாந்தை வெற்றி பெற முடியும்.

டாசை இழந்தாலும் இந்தியாவுக்கு சாதகமான ஒரு விஷயம் நடந்திருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

டாஸ் சாபம்

டாஸ் சாபம்

அடிலெய்ட் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற சர்வதேச t20 போட்டியில் எந்த அணி டாசை வென்றதோ அந்த அணி இதுவரை வெற்றி பெற்றதில்லை என்ற சாபம் நிலவுகிறது. இது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாபத்தை இங்கிலாந்து முறியடிக்குமா என்று இன்று தெரிந்துவிடும்.

ஆர்வமாக இருக்கிறேன்

ஆர்வமாக இருக்கிறேன்

இந்த நிலையில் போட்டி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, உலகக் கோப்பையில் அரை இறுதி ஆட்டம் என்பது மிகவும் பெரியது. இதனால் இந்த ஆட்டத்தை விளையாடுவது நினைத்து மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன். இன்றைய ஆட்டத்தில் ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் முக்கியமானது. இன்றைய போட்டியில் யார் பதற்றம் அடையாமல் அமைதியாக இருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் .

அமைதிக்கு காரணம்

அமைதிக்கு காரணம்

நாங்கள் தொடர்ந்து எங்களுடைய பயிற்சியை செய்து வந்ததால் இன்று அரை இறுதியில் இருக்கிறோம். அனைவரும் கேட்கிறார்கள் எப்படி நெருக்கடியான ஆட்டத்தில் கூட அமைதியாக இருக்கிறீர்கள் என்று..? அனைத்திற்கும் பயிற்சிதான் காரணம். நீங்கள் உங்களை தயார் படுத்திக் கொண்டு போட்டிக்கு தேவையான அனைத்து விஷயத்திலும் முன்கூட்டியே பயிற்சி செய்திருந்தீர்கள் என்றால் உங்கள் திறமை மீது நம்பிக்கை இருந்தால் நீங்கள் அமைதியாக தான் இருப்பீர்கள்.

பேட்டிங்கில் கவனம்

பேட்டிங்கில் கவனம்

விராட் கோலி சூரியகுமார் யாதவ் இருவரும் சிறப்பாக விளையாடினாலும் மற்றவர்கள் இன்னும் பேட்டிங்கில் அதிக ரன் குவிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். விராட் கோலி இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக வெற்றிகளை தேடி வருகிறார். சூரியகுமார் யாதவ் இந்திய அணியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தாமதமாகி விட்டது என்று தான் நான் நினைக்கிறேன்.

Story first published: Thursday, November 10, 2022, 13:59 [IST]
Other articles published on Nov 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+