அதிரடி அடில்.. 100 விக்கெட் வீழ்த்தி அசத்தல்...!
கார்டிப் : 100 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இணைந்தார் அடில் ரஷீத்.
ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கார்டிப்பில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் அடில் ரஷீத் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இது அவருக்கு மறக்க முடியாத போட்டியாகவும் மாறியது. காரணம் இந்தப் போட்டியில் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்கள் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா வீரர் ஆண்ட்ரு டை விக்கெட்டை வீழ்த்தியபோது அடில் ரஷீத் தனது 100ஆவது ஒருநாள் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட்கள் எடுத்த 13ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 269 விக்கெட்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
Story first published: Sunday, June 17, 2018, 17:48 [IST]
Other articles published on Jun 17, 2018


Click it and Unblock the Notifications