ரெய்னா வருகையால் பலமான குஜராத் அணி.. நடுவரிசையில் சிக்கல் தீர்ந்தது.. சாதகங்கள் என்ன?
அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் குஜராத் அணியால் தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய், விலகுவதாக அறிவித்தார்.
Recommended Video
இதனால், அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் விலை போகாத ரெய்னா, மாற்று வீரராக குஜராத் அணியில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ரெய்னா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரெய்னா வந்தால் குஜராத் அணியின் சாதகங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

பலமான பேட்டிங்
சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ரெய்னா, மிஸ்டர் ஐபிஎல் என்று ரசிகர்களால் அழைக்கப்படுவார். அவ்வளவு அனுபவமும், திறமையையும் உடைய ரெய்னாவின் வருகையால் பேட்டிங் பலமாக மாறிவிடும். குறிப்பாக நடுவரிசை அனுபவம் குறைந்ததாக கருதப்படுவதால், ரெய்னாவின் அனுபவம் கைக் கொடுக்கும்.

3வது வீரர்
ரெய்னா 3வது வீரராக களமிறங்குவார் என்பதால், ஆஸ்திரேலிய வீரர் மேத்தீவ் வேடை தொடக்க வீரராக ஜேசன் ராயுடன் களமிறக்கலாம். இதன் மூலம் மேத்தீவ் வேட், சுப்மான் கில், ரெய்னா, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, திவேட்டியா என பேட்டிங் வரிசை பலமாக மாறும். மேலும் ரெய்னா வருகையால் டேவிட் மில்லருக்கு நடுவரிசையில் வேலை இருக்காது.

வேகப்பந்துவீச்சு
இதனால், குஜராத் அணி கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளராக ஃபெகுர்சன், டோமினிக் டிராக்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்தி, பந்துவீச்சின் பலத்தை அதிகரிக்க முடியும். ஏற்கனவே முகமது ஷமி, ரஷித் கான் ஆகியோர் உள்ளதால், குஜராத் அணியின் பந்துவீச்சு கவலையும் தீர்ந்துவிடும்.

வியாபார வெற்றி
ரெய்னாவால் சுழற்பந்து வீச முடியும். மேலும் அவர் ஒரு சிறந்த ஃபில்டர். இதனால், அவரை எங்கு வேண்டும் என்றாலும் நிறுத்தலாம். ஏற்கனவே குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்ததால், ஹர்திக் பாண்டியாவுக்கு நல்ல துணையாக ரெய்னா செயல்படுவார். அனைத்து விடவும் முக்கியம், இனி ரெய்னா ரசிகர்கள் குஜராத் அணிக்கு ஆதரவு தருவார்கள். இதனால் குஜராத் அணிக்கு வியாபார ரீதியாகவும் வெற்றி தான்.


Click it and Unblock the Notifications