Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs AFG: வாழ்வா? சாவா? ஆட்டம் முன்பு ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒன்றாக இணைந்து தொழுகை

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தினால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும். வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இரண்டு அணிகளுமே களமிறங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவி ,கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுவிட்டால் ஆஸ்திரேலிய அணி தொடரை விட்டு வெளியேறிவிடும்.

AFG vs AUS Champions Trophy 2025 steve smith

இதனால் இது அணிகளுமே வெற்றிக்காக தீவிரமாக முனைப்பு காட்டினர். இந்த நிலையில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் தேர்வு செய்தது தொடக்க வீரராக களமிறங்கிய குர்பாஷ் ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். இதனை அடுத்து கடைசி போட்டிகள் 177 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹீம் சாட்ரன் இன்றைய ஆட்டத்தில் 22 மட்டுமே சேர்த்தார்.

இதேபோன்று ரஹமத்ஷா 12 ரன்களிலும், அஹ்மத்துல்லாஹ் ஷாஹிதி 20 ரன்களிலும் ஆட்டமிழக்க செதுக்குல்லா அட்டல் மட்டும் அபாரமாக விளையாடி 85 ரன்கள் சேர்த்தார். இதனால் 36 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இன்றைய ஆட்டத்திற்கு முன்பு அனைவரும் இணைந்து தொழுகை நடத்தினர்.

மைதானத்தில் உள்ள ட்ரெஸ்ஸிங் ரூமில் அனைத்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் இணைந்து இந்த தொழுகையை நடத்தினர். அப்போது இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு இறைவனின் உதவியை நாடி அவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் களத்தில் திறமையாகவும் அதேபோல் பக்தி மயமாகவும் விளங்கி வருவது நல்ல விஷயம் என ரசிகர்கள் அந்த அணியை பாராட்டி வருகின்றனர்.

Story first published: Friday, February 28, 2025, 17:07 [IST]
Other articles published on Feb 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+