AFG vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு தண்ணீ காட்டிய ஆப்கானிஸ்தான்.. 2 வீரர்கள் வைத்த ஆப்பு.. கலங்கிய ஸ்மித்
மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அபாரமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. லாகூரில் நடைபெற்ற குரூப் பி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும்.
இந்த சூழலில் இங்கிலாந்தை வீழ்த்திய அதே பலத்துடன் ஆப்கானிஸ்தான் இன்று களமிறங்கியது. ஆனால் இங்கிலாந்தை வேண்டுமென்றால் எளிதில் வீழ்த்தலாம். நாங்கள் உலக சாம்பியன் என்பதை ஆஸ்திரேலியா முதல் ஓவரிலே நிரூபித்தது.

ஆஸ்திரேலியாலின் ஸ்பென்சர் ஜான்சன் வீசிய ஒரு பந்தை எதிர்கொள்ள முடியாமல் குர்பாஸ் டக் அவுட் ஆனார். கடந்த போட்டியில் 177 ரன்கள் விளாசிய இப்ராஹிம் சாட்ரன் 22 ரன்களிலும் ஆட்டம் இழக்க, ரஹ்மத் ஷா 12 ரன்களிலும் கேப்டன் ஹஸ்மதுல்லா 20 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். எனினும் மூன்றாவது வீரராக களமிறங்கிய செதுக்குல்லா அட்டல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் அட்டல் அதிரடியாக விளையாடி 95 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்தார். 6 பவுண்டரி, மூன்று சிக்ஸர்களை அடித்த அட்டல் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய கட்டத்தில் வெளியேறினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தானை எளிதில் சுருட்டி விடலாம் என ஆஸ்திரேலிய வீரர்கள் ஆசையில் இருந்தனர். அப்போதுதான் களமிறங்கிய அஸ்மதுல்லா உமர்சாய் தன் வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார். அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 சிக்ஸர் ஒரு பவுண்டரி என அதிரடி காட்டினார். இதன் காரணமாக அவர் 63 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 273 ரன்கள் எடுத்தது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 17 ஓயிடு 37 ரன்களை கூடுதலாக வழங்கி இருப்பது ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சு தரப்பில் ஆடம் சம்பா, ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோயூர் தலா இரண்டு விக்கெட்டு களையும் பெண் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications