For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருகிட்ட.. புரட்டிப் போட்ட வார்னர், பின்ச்.. கடைசி வரை போராடிய ஆப்கன்! #AFG vs AUS

Recommended Video

World cup 2019 AUS VS AFG | ஆஸ்திரேலியாவின் பௌலிங்கை சமாளித்து ஆப்கானிஸ்தான் போராட்டம்!

பிரிஸ்டல் : ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடரின் நான்காம் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆப்கானிஸ்தான் இந்தப் போட்டியில் சுமாரான பேட்டிங், பந்துவீச்சை வெளிப்படுத்தினாலும், அனுபவம் குறைந்த அந்த அணி ஆடிய போராட்ட ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.

ஆப்கானிஸ்தான் பேட்டிங்

ஆப்கானிஸ்தான் பேட்டிங்

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஷாசாத், ஜஜாய் இருவரும் டக் அவுட் ஆனார்கள். அதன் பின் வந்த வீரர்களில் ரஹ்மத் ஷா 43, குலாபுதின் நயிப் 31, நஜிபுல்லா 51, ரஷித் கான் 27 ரன்கள் குவித்தனர். ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

 சமாளித்த ஆப்கன்

சமாளித்த ஆப்கன்

இந்த உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஆசிய அணிகளைக் காட்டிலும், வேகப் பந்துவீச்சை சிறப்பாக சமாளித்து, பேட்டிங்கில் ஓரளவு ரன்களை எடுத்தது ஆப்கன்.

ஆஸ்திரேலியா பந்துவீச்சு

ஆஸ்திரேலியா பந்துவீச்சு

ஆஸ்திரேலியா அணியில் பாட் கம்மின்ஸ் 3, ஆடம் சாம்பா 3, மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் 2, மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 208 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடியது ஆஸ்திரேலியா.

வார்னர் நிதானம்

வார்னர் நிதானம்

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், ஆப்கன் அணிக்கு வாய்ப்பே கொடுக்காமல், 96 ரன்கள் சேர்த்தனர். வார்னர் வழக்கத்தை விட இன்றைய போட்டியில் நிதானமாக ஆடினார்.

ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா வெற்றி

பின்ச் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா 15, ஸ்டீவ் ஸ்மித் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை களத்தில் நின்ற டேவிட் வார்னர் 89 ரன்கள் குவித்து அசத்தினார். 34.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா.

முஜீப் அதிர்ச்சி

முஜீப் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தான் அணியின் ஹமித் ஹாசன் அசத்தலாக பந்துவீசினார். 2 மெய்டன் ஓவர்கள் உட்பட, 6 ஓவர்கள் வீசிய அவர் 15 ரன்கள் மட்டுமே கொடுத்தார். முஜீப் உர் ரஹ்மான் ஓவருக்கு 9 ரங்களுக்கு மேல் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

ஆப்கன் அணிக்கு பாராட்டு

ஆப்கன் அணிக்கு பாராட்டு

ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும், மற்ற ஆசிய அணிகளை விட சிறப்பாக போராடியதைக் கூறி ரசிகர்கள் அந்த அணிக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Story first published: Sunday, June 2, 2019, 0:30 [IST]
Other articles published on Jun 2, 2019
English summary
AFG vs AUS Cricket World cup 2019 : Australia beat Afghanistan comfortably
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X