கிங்ஸ்டவுன்: வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 105 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்துள்ளது.
இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி முன்னேறி சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி குறித்து ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் பேசுகையில், அரையிறுதிக்கு முன்னேறியது கிட்டத்தட்ட எங்களுக்கு ஒரு கனவு போல் உள்ளது. இது நாங்கள் டி20 உலகக்கோப்பை தொடரை எப்படி தொடங்கினோம் என்பதும் காரணம்.

நியூசிலாந்து அணியை வீழ்த்திய பின்னர் தான் எங்களுக்கு நம்பிக்கை பெற்றோம். நிச்சயம் இது அற்புதமான உணர்வு. இந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே கிடையாது. ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும் மகிழ்ச்சியில் இருப்பார்கள். நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று பிரையன் லாரா மட்டுமே கணித்திருந்தார். அவர் சொன்னது சரியென்று நாங்கள் நியூபித்துள்ளோம்.
இந்த தொடருக்கு முன்பாக அவரை சந்தித்த போது, நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டு வர மாட்டோம் என்றேன். இந்த போட்டியில் 15 ரன்கள் நாங்கள் குறைவாகவே எடுத்தோம். ஆனாலும் வென்றதற்கு எங்களின் மனநிலையே காரணம். வங்கதேசம் அணி 12 ஓவர்களில் சேஸிங் செய்வது எளிதல்ல என்று தெரியும். அதனால் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம். அதுவே சாதகமாக அமைந்தது.
ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் பவுலிங் செய்ய வேண்டும் என்பதே திட்டன். அதேபோல் ஒய்டு, லெக் பைஸ் அதிகமாக விட்டுக் கொடுக்கவில்லை. மழையை நம்பாமல் 100 சதவித உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் எங்கள் அணியில் சிறந்த அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பவுலிங்கில், திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் திறமை இருந்தால், சாதிக்க முடியும். மனதளவில் நாங்கள் தயாராகவே இருந்தோம்.
டி20 கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளை எடுத்து, 20 ஓவர்களையும் விளையாட முயற்சிக்க வேண்டும். இந்த போட்டியில் எங்களுக்கும் அதுதான் தேவையாக இருந்தது. இது ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை. அரையிறுதி சுற்றிலும் தெளிவான மனநிலையில் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.