For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

AFG vs BAN : ஆஸ்கர் அவார்டை கொடுடா டிரம்ப்பே.. ஆஸ்திரேலியா கதறல்.. ரகளையான மீம்ஸ் இதோ!

கிங்ஸ்டவுன் : வங்கதேசம் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தியதோடு, டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றி காரணமாக, ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. இதனுடன் வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

கந்தசாமி படத்தில் கந்தசாமி வேஷம் போட்டு போலீஸிடம் மாட்டிக் அடிவாங்குவார் வடிவேலு. இதன்பின் மீண்டும் வடிவேலுவை பார்க்கும் மன்சூர் அலி கான், நீ தானா கந்தசாமி வேஷம் போட்டு அடி வாங்குனவன் என்று கேட்பார். அதுபோல் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியின் போது தசைபிடிப்பு என்று நடித்த குல்புதின் நயீப், வெற்றிக்கு பின் உசைன் போல்ட் வேகத்தில் ஓடி சென்று கொண்டாடினார். இதனை அப்படியே மாற்றி குல்புதின் நயீப்பை பார்த்து, "கிராம்ப்ஸ்-னு சொல்லி நொண்டி நொண்டி நடந்து போனவன் தான நீ" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு மொமண்ட்.

t20 world cup AFG vs BAN memes indian national cricket team cricket 20 2024

"மாஞ்சா வேலு" படத்தில் சந்தானத்திடம் லொல்லு சபா மனோகர், "நான் நெருப்புடா" என்று பஞ்ச் டயலாக் சொல்வார். அதன்பின் அதற்கு சந்தானம், "இனிமேல் நீ ரெடிமேட் அடுப்புடா" என்று நெருப்பு கீழ் நிற்க வைப்பார். இதனை அப்படியே மாற்றி, மனோகரை ஆஸ்திரேலியா அணியாக மாற்றி, "We are ****ing Aussies" டா என்று சொல்வதாகவும், அதற்கு இந்தியா, ஆஃப்கானிஸ்தான் அணியாகவும் மாற்றி இணைந்து, ஆஸ்திரேலியாவை நெருப்பு கீழ் நிற்க வைப்பது போல உருவாக்கப்பட்டுள்ள மீம் தக் லைஃப் மொமண்ட்.

t20 world cup AFG vs BAN memes indian national cricket team cricket 20 2024

கடந்த ஆண்டின் போது ரசிகர் ஒருவர் படம் பார்த்துவிட்டு வெளியேற வந்த போது, "ஆஸ்கர் அவார்டை கொடுடா டிரம்ப்பே" என்று சொன்ன ரிவ்யூ ட்ரெண்டாகியது. அதனை குல்புதின் நயீப் நடிப்பிற்கு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர். ஓய்வறையில் நின்று பயிற்சியாளர் ட்ராட் மழை பெய்கிறது, ஆட்டத்தை தாமதப்படுத்துங்கள் என்று கூறினார். அப்போது ஸ்லிப்பில் நின்றிருந்த குல்பிதின் நயீப் உடனடியாக காலினை பிடித்து கொண்டு குப்புறப்படுத்த சம்பவம், ரியல் ஆஸ்கர் அவார்டை கொடுடா டிரம்ப் மொமெண்ட்.

t20 world cup AFG vs BAN memes indian national cricket team cricket 20 2024

படிக்காதவன் படத்தில் தனுஷ் 12 பாஸ் செய்ய முடியாததை, அவரது தந்தையான பிரதாப் போத்தன், "உன் தம்பியும் தான் படிச்சான்.. முதலில் உனக்கு பின் படித்தான்.. அப்புறம் உன்கூட படிச்சான்.. அப்புறம் உன்னை தாண்டி போயிட்டான்" என்று கிண்டல் செய்வார். இதனை அப்படியே ஆஃப்கானிஸ்தான் அணியுடன் ஒப்பிட்டு வங்கதேச அணியை விமர்சிக்கும் வகையில், "உனக்கு அப்புறம் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சான்.. இப்போ படிப்படியா முன்னேறி அரையிறுதிக்கு போயிட்டான்.. ஆனால் நீ பாம்பு டான்ஸ் ஆடுற.. ஆடுற.. ஆடிகிட்டே இருக்க" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் புண்படுத்திகிட்டே இருக்கீங்களேடா மொமண்ட்.

t20 world cup AFG vs BAN memes indian national cricket team cricket 20 2024

முதல்வன் படத்தில் ரகுவரன், அர்ஜூன் உடனான நேர்காணலின் போது கேமராவை ஆஃப் செய்ய சொல்லுவார். அப்போது கேமராவுக்கு பின் நிற்கும் வடிவேலு, அய்யோ.. பாவம் என்று சிரித்து நக்கல் செய்வார். அதுபோல் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் யார் என்று கம்மின்ஸிடம் கேட்ட போது, ஆஸ்திரேலியா.. மற்ற 3 அணிகள் யாரென்று கவலையில்லை என்று கூறுவார். அந்த பதிலை நினைத்து ரசிகர்கள் நக்கல் செய்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா மொமண்ட்.

t20 world cup AFG vs BAN memes indian national cricket team cricket 20 2024
Story first published: Tuesday, June 25, 2024, 13:27 [IST]
Other articles published on Jun 25, 2024
English summary
AFG vs BAN : Fantastic memes from Social Media after Afghanistan Qualifed for Semi finals and Australia eliminated from T20 world cup 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+