Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AFG vs BAN: தம்பி மிட்சல் மார்ஷ்.. இப்போ உலகக்கோப்பை மேல கால் வைங்க பார்ப்போம்.. பொளக்கும் ரசிகர்கள்

கிங்ஸ்டவுன் : வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்று, டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் மிட்சல் மார்ஷை கிண்டல் செய்து வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி முதல்முறையாக முன்னேறியுள்ளது. வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் காரணமாக டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இருந்து வங்கதேசம் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணியும் வெளியேற்றப்பட்டுள்ளது.

t20 world cup AFG vs BAN indian national cricket team cricket 20 2024

இந்த போட்டியில் வங்கதேசம் வெற்றிபெற்றால் மட்டுமே ஆஸ்திரேலியா அணி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழல் இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் சோசியல் மீடியா பக்கத்தில் இருந்தே நேரடியாகவே வங்கதேசம் அணிக்கு ஆதரவளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா வெளியேறியதால், இந்திய ரசிகர்கள் பலரும் கேப்டன் மிட்சல் மார்ஷை பொளந்து கட்டி வருகின்றனர்.

ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின் ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஷ் பேசிய போது, இந்திய அணியை வீழ்த்தினாலே அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். இந்திய அணியை வீழ்த்த எங்களை விடவும் சிறந்த அணி யார் இருக்கிறார்கள் என்று வாயை விட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியிடமும் தோல்வியடைந்த மிட்சல் மார்ஷ், இன்னும் வாய்ப்பிருப்பதாக கூறினார்.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்திய பின், ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பையை வென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அப்போது ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ், உலகக்கோப்பை மீது காலினை வைத்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இது இந்திய ரசிகர்களை கவலையடைய செய்தது. உலகக்கோப்பையை காலில் வைக்கலாமா என்று பலரும் மிட்சல் மார்ஷை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பையில் அதே மிட்சல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி ஆஃப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், வங்கதேசத்தின் வெற்றிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

எந்த உலகக்கோப்பையை மதிக்காமல் காலில் போட்டு போஸ் கொடுத்த மிட்சல் மார்ஷ், அடுத்த 8 மாதத்திலேயே உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடி வரும் இந்திய அணி ரசிகர்கள், இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா அணியின் தோல்வியை தீவிரமாக கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Tuesday, June 25, 2024, 11:57 [IST]
Other articles published on Jun 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+