இதை கவனிச்சீங்களா? கடைசி விக்கெட்டுக்காக பிராவோ விரித்த வலை..வசமாக சிக்கிய வங்கதேசம்! மாஸ்டர் பிளான்!
மும்பை : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்திய விதத்தை ஒரு பல்கலைக்கழகத்தில் பாடமாகவே சேர்த்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு இதில் பல யுத்திகள் கையாள பட்டு இருக்கிறது.
கிரிக்கெட் என்பது ஒரு மனதளவில் நடத்தப்படும் போர் என்று பல வல்லுனர்கள் குறிப்பிடுவார்கள். அதாவது பேட்ஸ்மேன் எப்படி ஏமாற்றி விக்கெட்டுகளை எடுப்பது என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யம்.

அதே போல் பவுலர்களை எப்படி சமாளிப்பது ரன்களை தடுக்க காத்திருக்கும் பில்டர்களை எப்படி கையாள்வது என்பது பேட்ஸ்மேனின் சாமர்த்தியம். இந்த நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் குலாப்தின் காயம் ஏற்பட்டது போல் நடித்து நேரத்தை கடத்தி ஆப்கானிஸ்தான் போட்டியை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது ஆப்கானிஸ்தான் நடத்திய மிகப்பெரிய யுக்தி என்று ரசிகர்கள் வர்ணிக்கும் நிலையில் தற்போது அதையே மிஞ்சும் அளவுக்கு ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
அதாவது வெற்றிக்கு எட்டு பந்துகளில் ஒன்பது ரன்கள் இருக்கும்போது, பவுண்டரி எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ ஆப்கானிஸ்தான் வீரர் ஃபருக்கியிடம் ஒரு மெசேஜ் அனுப்புகிறார். அப்போது கேமரா தங்களை போக்கஸ் செய்கிறது என்பதை தெரிந்து கொண்ட பிராவோ, வேண்டுமென்றே நவீன் ஹுல் ஹக்கை ஷார்ட் பால் வீச சொல்லுங்கள் என்று மெசேஜ் அனுப்புகிறார்.
இதை உடனே பரூக்கி, ஓடி சென்று ரஷீத் கான் இடம் தெரிவிக்கிறார். அப்போது பேட்ஸ்மேன் ஆக நின்ற முஸ்தஃபீசூர் ரஹ்மான் கவனிக்கும் வகையில் ஷார்ட் பாலை வீசுங்கள் என்று பிராவோ கூறுவதாகவும் கேட்ச் பிடிக்க ஒரு ஆளை நிறுத்துங்கள் என்று ரஷித் கானிடம் பரூக்கி கூறுகிறார். இதனை நம்பிய முஸ்தஃபீசூர் ரஹ்மான் இந்த பந்து ஷார்ட் பாலாக தான் வரப்போகிறது என்பதை நினைத்து அதனை எதிர்கொள்ள Back foot-ல் நின்றார்.
ஆனால் முஸ்தஃபிசுர் ரஹ்மான் எதிர்பாராத வகையில் திடீரென்று lbw ஐ குறி வைத்து நவீன் பந்தை வீச அது நேரடியாக காலில் பட்டது. இதற்கு நடுவர் அவுட்டும் கொடுத்து விட்டார். உடனே ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் பிராவோ வை கட்டி சென்று கொண்டாடினர். அப்போதுதான் தெரிந்தது சார்ட் பால் வீசப் போகிறோம் என வங்கதேச பேட்ஸ்மேன்களை நம்ப வைத்து விட்டு பின் வேறொரு பந்தை வீசி விக்கெட்டை எடுக்க தான் பிராவோ இப்படி ஒரு பிளாள் போட்டது வெளிச்சத்துக்கு வந்தது.


Click it and Unblock the Notifications