Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரையிறுதி குறித்து பாட் கம்மின்ஸ் திமிர் பேச்சு.. முற்றிலும் பொய்யான கணிப்பு.. தேவையா இந்த அவமானம்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு சென்று இருக்கிறது. இதன் மூலம் அரையிறுதியில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்று இருக்கிறது.

இந்த சூழலில் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் பாட் கம்மின்ஸ், ஒரு திமிரான பேச்சை பேசியிருந்தார். அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் எது என்று கம்மின்ஸிடம் கேள்வி கேட்கப்பட்டது.

t20 world cup afg vs ban pat cummins

அதற்கு அவர் அளித்த திமிரான கணிப்பு தற்போது முற்றிலும் பொய்யாக மாறியிருக்கிறது. இது குறித்து இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு பேசிய பாட் கம்மின்ஸ், அரையிறுதி சுற்றுக்கு எந்தெந்த அணிகள் வரும் எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் ஆஸ்திரேலியா கண்டிப்பாக வரும். ஆஸ்திரேலியாவை நிச்சயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மற்ற மூன்று அணிகள் குறித்து எனக்கு கவலை இல்லை. எந்த மூன்று அணிகள் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் ஆஸ்திரேலியா கண்டிப்பாக அரை இறுதியில் விளையாடும் என்று கம்மின்ஸ் கூறியிருந்தார். ஆனால் இன்று ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்று தொடரில் இருந்து வெளியேறி மண்ணை கவ்வி இருக்கிறது. இதன் மூலம் கம்மின்ஸின் இந்த திமிரான பேச்சுக்கு நல்ல பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். பேட் கம்மின்ஸ் ஓவர் தலைகனத்துடன் பேசியதாகவும் தற்போது அதற்கு நல்ல பாடத்தை ரோகித் சர்மா மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கற்றுக் கொடுத்து விட்டதாகவும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

எதிர் அணியின் ரசிகர்களின் வாயை மூட வைப்பது எங்களின் மிகப்பெரிய இலக்கு என்று கடந்த 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையின் போது கம்மின்ஸ் பேசி இருந்தார். தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தான் அதிர்ச்சியில் வாயை மூடிக்கொண்டு விமான நிலையம் நோக்கி செல்வதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Tuesday, June 25, 2024, 12:16 [IST]
Other articles published on Jun 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+