Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தவன் முன்னேற கூடாது என நினைத்தால் இது தான் கதி.. வங்கதேச அணியின் பரிதாபம்.. என்ன நடந்தது?

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி போல் வங்கதேசத்திற்கும் அடுத்த சுற்றுக்கு செல்லலாம் என்ற வாய்ப்பு இருந்தது.

ஆனால் வங்கதேசம் பொறாமையின் காரணமாக தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்திருக்கிறது .அது என்னவென்று தற்போது பார்க்கலாம். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அரை இறுதி சுற்றுக்கு சென்று விடலாம் என்ற நிலை இருந்தது.

t20 world cup afg vs ban cricket

இதே போல் வங்கதேச அணியும் ஆப்கானிஸ்தானை மிகப் பெரிய ரன்கள் வித்தியாசம் அல்லது ஸ்கோரை விரைவாக சேஸ் செய்தால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நிலை இருந்தது. அதற்கு ஏற்றார் போல் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த சூழ்நிலையில் வங்கதேச அணி 12 ஓவரில் 115 ரன்கள் சேஸ் செய்திருந்தால், அரையிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலை இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் அரை இறுதிக்கு செல்ல வேண்டும் என ஒவ்வொரு அணியும் அதிரடியாக ஆடி நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வங்கதேச அணி முதல் சில பந்துகளை எதிர்கொள்ளும் போதே நாம் அரையறுதிக்கு செல்ல முடியாது. இருந்தும் ஆப்கானிஸ்தானை அடுத்த சுற்றுக்கு செல்ல விடக்கூடாது என்ற பாணியில் தான் விளையாடி வந்தது.

115 ரன்கள் என்ற இலக்கை 12 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூக்கிப் போட்டுவிட்டு வங்கதேச வீரர்கள் ஜெயித்தால் போதும் என்று விளையாடத் தொடங்கினர். இதுதான் அந்த அணி செய்த தவறு. கிரிக்கெட் உலகில் எந்த அணியாக இருந்தாலும் சரி முதலில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்க தான் விளையாடி இருப்பார்கள். ஆனால் வங்கதேசம் அணி எந்த ஒரு அதிரடி காட்டாமல் மெதுவாக ரன்களை சேர்த்தார்கள்.

அப்படி சேர்த்தும் தோற்றுப் போனார்கள் என்பதுதான் இங்கு நாம் கவனிக்க வேண்டும். இதையே வங்கதேச அணி 115 ரன்கள் என்று இலக்கை வேகமாக சேஸ் செய்ய வேண்டும் என ஆடி தோற்று இருந்தார்கள் என்றால் அவர்களை ரசிகர்களும் பாராட்டிருப்பார்கள். ஆனால் நான் அரையிறுதிக்கு செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை.

எங்களுக்கு பின்னால் ஆட வந்த கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு போகக்கூடாது என்ற பாணியில்தான் வங்கதேசம் வீரர்கள் விளையாடினார்கள். இப்படி ஒரு மனநிலையில் வங்கதேசம் வீரர்கள் இருப்பதால்தான் அந்த அணியால் இதுவரை ஒரு முறை கூட icc அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியவில்லை. இதனால் 115 ரன்கள் என்ற இலக்கை ஏன் 12 ஓவர்களில் சேஸ் செய்ய வங்கதேசம் முயற்சி செய்யவில்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Story first published: Tuesday, June 25, 2024, 21:21 [IST]
Other articles published on Jun 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+