Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரித்திர சாதனை.. கோலியின் செஞ்சுரி ரெக்கார்டை உடைத்த ஆப்கன் வீரர்.. சச்சினின் சாதனை சமன்

ஷார்ஜா: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறார். குறிப்பாக விராட் கோலியின் சாதனையை முறியடித்து இருக்கிறார். சச்சினின் அரிய சாதனையை சமன் செய்து இருக்கிறார்.

இதன் மூலம் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2 - 1 என வென்றது. முன்னதாக வங்கதேசத்துக்கு எதிரான இந்த தொடரின் முதல் போட்டியில் 92 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது.

afg vs ban rahmanullah gurbaz virat kohli


இரண்டாவது போட்டியில் வங்கதேசம் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலை இருந்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது.

மஹ்மதுல்லா 98 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 119 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் 7 ஓவர்களில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

அடுத்து ஆப்கானிஸ்தான அணி 245 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடியது. துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அபாரமாக ஆடி 120 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். அவர் 7 சிக்ஸ் மற்றும் 5 ஃபோர் அடித்து இருந்தார். இது அவரது எட்டாவது ஒருநாள் போட்டி சதம் ஆகும். மறுபுறம் அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 49 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை 2 - 1 என வென்றது. இந்த போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் தனது எட்டாவது சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி சாதனையை முறியடித்து இருக்கிறார்.

23 வயதுக்குள் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரஹ்மானுல்லா குர்பாஸ் முதல் இடத்தை சச்சின் டெண்டுல்கர் மற்றும் க்விண்டன் டி காக் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர்கள் ஓவரும் 23 வயதுக்குள் எட்டு ஒருநாள் போட்டிசதங்களை அடித்து உள்ளனர்.

மேலும், விராட் கோலி இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் 23 வயதுக்குள் 7 ஒருநாள் போட்டி சதங்களை அடித்து இருக்கிறார். விராட் கோலியின் சாதனையை முறியடித்ததோடு சச்சினின் சாதனையை சமன் செய்து இருக்கிறார் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ்.

Story first published: Tuesday, November 12, 2024, 8:57 [IST]
Other articles published on Nov 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+