Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AFG vs CAN: சூப்பர் 8 கனவு கலைந்தாலும் கெத்து காட்டிய ஆப்கானிஸ்தான்.. கனடாவை பந்தாடி ஆறுதல் வெற்றி

சென்னை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தாலும், தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடா அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராகிம் சத்ரான் பேட்டிங்கிலும், முகமது நபி பந்துவீச்சிலும் அபார ஆட்டம் ஆடினர்.

கனடா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்குத் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான குல்பதின் நைப் 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

AFG vs CAN Afghanistan Crush Canada by 82 Runs with the help of Ibrahim Zadran and Mohammad Nabi prowess

இப்ராகிம் சத்ரான் சதம் மிஸ்

பின்னர் களமிறங்கிய இப்ராகிம் சத்ரான், சென்னை ஆடுகளத்தில் கனடா பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார். அவருக்குத் துணையாக சேடிக்வல்லா அட்டல் 32 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் நங்கூரம் போல நிலைத்து நின்ற இப்ராகிம் சத்ரான், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 95 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். வெறும் 5 ரன்களில் அவர் சதத்தைத் தவறவிட்டது ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்தது.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. கனடா தரப்பில் ஜஸ்கரன் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அதிக ரன்களை வாரி வழங்கினார்.

முகமது நபி சுழல் ஜாலம்

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கனடா அணி, ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக அனுபவ வீரர் முகமது நபி தனது சுழற்பந்து வீச்சால் கனடா வீரர்களைத் திணறடித்தார்.

4 ஓவர்கள் வீசிய முகமது நபி, வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது இவரது டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சாகும். கேப்டன் ரஷீத் கான் தனது பங்கிற்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கனடா அணியில் ஹர்ஷ் தாக்கர் 30 ரன்களும், சாத் பின் ஜாபர் 28 ரன்களும் எடுத்தனர்.

ஆறுதல் வெற்றி

இறுதியில் கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இந்தத் தொகுப்பிலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டதால், ஆப்கானிஸ்தான் அணிக்கு இது ஒரு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஒரு பெரிய வெற்றியுடன் டி20 உலகக்கோப்பைத் தொடரை ஆப்கானிஸ்தான் நிறைவு செய்துள்ளது.

Story first published: Thursday, February 19, 2026, 22:49 [IST]
Other articles published on Feb 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+