Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தை துவம்சம் செய்த ஆப்கானிஸ்தான்! சாம்பியன்ஸ் டிராபியில் 177 ரன்கள் குவித்து இப்ராஹிம் சாதனை

லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் இன்று லாகூரில் பலப்பரிட்சை நடத்தினர். இந்த போட்டியில் பெரிதாக என்ன நடந்து விடப்போகிறது என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.

லாகூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஐபிஎல் வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 6 ரன்னிலும், செதிக்குல்லா அடல் 4 ரன்களிலும், ரஹமத் ஷா நான்கு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

AFG vs ENG Champions Trophy 2025 Ibrahim Zadran

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 32 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இதனை அடுத்து நான்காவது விக்கெட் தொடக்க வீரர் இப்ராகிம் சாட்ருனும் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி ஆப்கானிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டது.

ஹ்ஸ்மதுல்லா 67 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இன்னும் தொடக்க வீரர் இப்ராஹிம் ஷாட்ரன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 65 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அஸ்மதுல்லா 41 ரன்கள் வெளியேற அதன் பிறகு அஸ்மதுல்லாஹ் உமர்சாயுடன் சேர்ந்து இப்ராஹிம் ஷாட்ரன் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இப்ராகிம் சாட்ரன், இன்று ஒரு சம்பவம் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் பேட்டிங் செய்தார். இங்கிலாந்து வீசிய மோசமான பந்துகளை எல்லாம் அடித்து ரன்களை சேர்த்த இப்ராஹிம் 106 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார்.

ஒரு கட்டத்தில் அஸ்மதுல்லா உமர் சாய் 41 ரன்களில் ஆட்டம் இழக்க, முகமது நபியும் இப்ராஹிம் சாட்ரனும் ஜோடி சேர்ந்தனர். அப்போதும் இப்ராஹிம் சார்டன் தான் சதம் அடித்து விட்டோமே என ஆட்டம் இழக்காமல் தொடர்ந்து பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் பவுண்டரி, சிக்சர் என பறக்க விட்டார்.

ஒரு கட்டத்தில் இவரை கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். 146 பந்துகளை எதிர்கொண்ட இப்ராஹீம் சாட்ரன் 177 ரன்கள் விளாசினார்.இதில் 12 பவுண்டரிகளும் ஆறு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இப்ராஹீம் சாட்ரன் படைத்தார்

இதே போன்று 40 வயது வீரரான முகமது நபியும் 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்து இருக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறவில்லை என்றால் தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும்.

Story first published: Wednesday, February 26, 2025, 18:37 [IST]
Other articles published on Feb 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+