For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரு சாமி நீங்க? உலகக்கோப்பையில் பெரிய அணிகளை காலி செய்யும் 2 ஆப்கானிஸ்தான் வீரர்கள்!

லாகூர்: ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து உலகக் கோப்பைகள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் பெரிய அணிகளை வீழ்த்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் துவக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் தான் என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதற்கு முன் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி அந்த அணிகளை முதல் சுற்றுடன் வெளியேற்றி இருந்தது ஆப்கானிஸ்தான். அடுத்து 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வீழ்த்தி தொடரில் இருந்து வெளியேற்றி இருந்தது ஆப்கானிஸ்தான் அணி.

AFG vs ENG Champions Trophy 2025 Afghanistan 2025

தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியை தொடரில் இருந்து வெளியேற்றி இருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. இந்த ஐந்து வெற்றிகளிலும் அந்த அணியின் துவக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் முக்கிய பங்களிப்பை செய்துள்ளனர். அது பற்றி பார்க்கலாம்.

2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 65 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 87 ரன்களும் எடுத்தனர்.

2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார்.

2024 டி20 உலகக் கோப்பையின் குரூப் சுற்றில், ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 80 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 44 ரன்களும் எடுத்தனர்.

2024 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில், ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 51 ரன்களும் எடுத்தனர்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இப்ராஹிம் சத்ரான் 177 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

Story first published: Thursday, February 27, 2025, 16:27 [IST]
Other articles published on Feb 27, 2025
English summary
AFG vs ENG: Ibrahim Zadran and Rahmaullah Gurbaz are the reason for Afghanistan success in World Cup and Champions trophy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+