For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மெகா செஞ்சுரி.. உலக சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம்.. சச்சின் ரெக்கார்டும் முறியடிப்பு

லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் மாபெரும் சாதனை படைத்தது. அந்த போட்டியில் இப்ராஹிம் சத்ரான் அபாரமாக விளையாடி 146 பந்துகளில் 177 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி அந்த போட்டியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் சேர்த்த நிலையில், அதில் பெரும்பாலான ரன்களை இப்ராஹிம் சத்ரான் மட்டுமே எடுத்தார்.

அவர் அடித்த இந்த சதம் பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறது. சச்சின் டெண்டுல்கரின் சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை இப்ராஹிம் சத்ரான் முறியடித்து இருக்கிறார். ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரண்டு தொடர்களிலும் சதம் அடித்த வீரர்களில் இளம் வீரர் என்ற சாதனையை இப்ராஹிம் சத்ரான் செய்து இருக்கிறார்.

AFG vs ENG Ibrahim Zadran Champions Trophy 2025 Afghanistan 2025

இதற்கு முன் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கர், ரச்சின் ரவீந்திரா ஆகிய மூவரும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு சர்வதேச ஒருநாள் தொடர்களிலும் சதம் அடித்து இருந்தனர். தற்போது நான்காவதாக இப்ராஹிம் சத்ரான் சதம் அடித்து இருக்கிறார். இந்த மூவரில் இப்ராஹிம் சத்ரான் தான் இளம் வீரர் ஆவார்.

ஒருநாள் போட்டி உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இளம் வயதில் சதம் அடித்தவர்கள் :

ஜோ ரூட் - 26 வயது 153 நாட்கள்

சச்சின் டெண்டுல்கர் - 25 வயது 187 நாட்கள்

ரச்சின் ரவீந்திரா - 25 வயது 98 நாட்கள்

இப்ராஹிம் சத்ரான் - 23 வயது 76 நாட்கள்

இது மட்டுமின்றி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே மிகப்பெரிய தனிநபர் ஸ்கோரை எடுத்த வீரர் என்ற இமாலய சாதனையையும் செய்திருக்கிறார் இப்ராஹிம். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் 165 ரன்கள் எடுத்து சாம்பியன்ஸ் வரலாற்றில் மிகப்பெரிய ஸ்கோரை அடித்திருந்தார்.

மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் பென் டக்கெட் படைத்திருந்தார். அவரது சாதனையை அடுத்த சில நாட்களிலேயே இப்ராஹிம் சத்ரான் முறியடித்து இருக்கிறார். தற்போது 177 ரன்கள் அடித்து சாம்பியன்ஸ் டிராபியில் மிகப்பெரிய ஸ்கோரை அடித்திருக்கிறார்.

இது மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் அணிக்காக சாம்பியன்ஸ் டிராபியில் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார் இப்ராஹிம் சத்ரான். அவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் உலகக் கோப்பை சதத்தையும் அடித்து இருந்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்காக உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு தொடர்களிலும் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்று இருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 325 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் ஒ ரூட் சிறப்பாக ஆடி 120 ரன்கள் சேர்த்தார். ஆனால், இங்கிலாந்து அணி கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை இழந்து 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Thursday, February 27, 2025, 8:27 [IST]
Other articles published on Feb 27, 2025
English summary
AFG vs ENG: Ibrahim Zadran registers highest score in Champions Trophy 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+