Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AFG vs SA: டாஸில் தோல்வி.. ஆப்கன் கேப்டன் சோகம்.. ஒரே ஒரு ஸ்பின்னருடன் இறங்கும் தென்னாப்பிரிக்கா

கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான குரூப் பி பிரிவு போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பேசுகையில், "இந்த பிட்ச் எப்படி இருக்கும் என எங்களுக்கு தெரியாது. நாங்கள் அதிக ஸ்கோரை எடுக்க முயற்சி செய்வோம். எங்களது பௌலிங் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. எனவே நாங்கள் ஒரே ஒரு ஸ்பின்னரான ஷம்சியை மட்டும் அணியில் சேர்த்து இருக்கிறோம். மற்றவர்கள் அனைவரும் வேகப்பந்துவீச்சாளர்கள் தான்" என்று கூறினார்.

Champions Trophy 2025 Afghanistan India 2025

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்மதுல்லா ஷாகிதி பேசுகையில், "நாங்களும் டாஸ் வென்று இருந்தால் பேட்டிங்கை தான் தேர்வு செய்து இருப்போம். ஆனால் டாஸ் வெல்வது எங்கள் கைகளில் இல்லை. நாங்கள் தரமான கிரிக்கெட்டை ஆட விரும்புகிறோம். எங்கள் அணியில் நல்ல ஸ்பின்னர்கள் உள்ளனர். நாங்கள் இன்று சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்துவோம். பவர் பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன். அதை மிடில் ஓவர்களில் மற்ற பௌலர்களும் தொடர எளிதாக இருக்கும்" என்றார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் பிளேயிங் லெவனை இங்கே காணலாம்.

ஆப்கானிஸ்தான் (பிளேயிங் லெவன்): ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அட்டல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மதுல்லா ஓமர்ஜாய், குல்பாதின் நயீப், முகமது நபி, ரஷித் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நோர் அஹமது

தென்னாப்பிரிக்கா (பிளேயிங் லெவன்): ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), டோனி டி ஜோர்ஜி, டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி

Story first published: Friday, February 21, 2025, 14:47 [IST]
Other articles published on Feb 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+