Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 கிரிக்கெட்டில் இப்படி ஒரு மோசமான சாதனையை எந்த டீமும் செய்ததே இல்லை.. சொதப்பிய ஆப்கானிஸ்தான்

டரூபா: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் எந்த ஒரு நாக் அவுட் போட்டியிலும் எந்த அணியும் செய்யாத மோசமான சாதனையை செய்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இதற்கு முன் முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் எல்லாம் சிறப்பாக ரன் சேர்த்து வெற்றி பெற்று இருந்தது. அதனால், அந்த அணி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி வெறும் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது கிரிக்கெட் உலகில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த அணி இந்த உலகக்கோப்பையில் இதுவரை நன்றாக ஆடி வந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சந்திக்க முடியாமல் மிக மோசமாக திணறியது.

11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலகக் கோப்பை மட்டுமின்றி எந்த ஒரு நாக் அவுட் போட்டியிலும் மிகக் குறைந்த ஸ்கோர் எடுத்து மிக மோசமான சாதனையை பதிவு செய்தது. அதுமட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் மிகக் குறைந்த ஸ்கோரும் இதுதான்.

மேலும், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் ஒரு அணி எடுக்கும் மிக குறைந்த ஸ்கோரும் இதுதான். முதல் முறையாக டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அரை இறுதிக்கு முன்னேறி இருந்த ஆப்கானிஸ்தான் மோசமான பேட்டிங் ஆடி மோசமான சாதனைகளை செய்திருப்பது அந்த அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Thursday, June 27, 2024, 8:21 [IST]
Other articles published on Jun 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+