டி20 வரலாற்றில் இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. உலக சாதனைகளை அடித்து நொறுக்கிய முகமது நபி
அபுதாபி: 2025 ஆசிய கோப்பை தொடரின் மிக முக்கியமான 'வாழ்வா சாவா' ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரரும், 'புரொபசர்' என்று அழைக்கப்படுபவருமான முகமது நபி, 40 வயதில் ஆடிய ஆட்டம், கிரிக்கெட் உலகின் பல உலக சாதனைகளைத் உடைத்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான ஆடிய கோப்பை போட்டியில் அவர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசினார். அதன் மூலம் டி20 வரலாற்றிலேயே ஒரு முழு உறுப்பினர் அணிக்கு எதிராக
அபுதாபியில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது களமிறங்கிய முகமது நபி, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 18 ஓவர்கள் முடிவில் 10 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர், கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 46 ரன்களைக் குவித்து, கிரிக்கெட் உலகையே மிரள வைத்தார்.

இந்த ஆட்டத்தின் உச்சக்கட்டமாக, துனித் வெல்லலகே வீசிய போட்டியின் கடைசி ஓவரின் முதல் ஐந்து பந்துகளையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டு, மைதானத்தை அதிர வைத்தார். ஆறாவது பந்திலும் சிக்ஸர் அடித்து வரலாற்றுச் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் பந்தில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இருப்பினும், அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் குவிக்கப்பட்டது.
இது, ஒரு முழு உறுப்பினர் அணிக்கு எதிரான டி20 போட்டியின் 20வது ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற புதிய உலக சாதனையாகும். இதற்கு முன்னர், டேவிட் மில்லர் மற்றும் மர்லன் சாமுவேல்ஸ் ஆகியோர் 28 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், முகமது நபி தனது 40 வயது மற்றும் 260 நாட்களில் இந்த அரைசதத்தை விளாசினார். இதன் மூலம், ஒரு முழு உறுப்பினர் அணிக்கு எதிராக டி20 போட்டியில் அரைசதம் அடித்த இரண்டாவது வயதான வீரர் என்ற பெருமையை பெற்றார்.
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல்க்கு (41 வயது) இந்த சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மேலும், இது ஆசிய கோப்பை வரலாற்றிலேயே (ஒருநாள் மற்றும் டி20) ஒரு வீரர் அடிக்கும் அதிக வயது அரைசதமாகும். இதற்கு முன்னர், மிஸ்பா-உல்-ஹக் (ஒருநாள்) மற்றும் திலகரத்னே தில்ஷன் (டி20) ஆகியோர் 39 வயதில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.
நபியின் பங்களிப்பு பேட்டிங்குடன் முடியவில்லை. பந்துவீச்சிலும், அவர் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்காவின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு அணிக்கு எதிராக, டி20 போட்டியில் அரைசதம் அடித்து, விக்கெட்டும் வீழ்த்திய முதல் 40 வயது வீரர் மற்றும் உலகின் வயதான வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார்.
முகமது நபியின் இந்த நம்ப முடியாத ஆட்டத்தால், ஆப்கானிஸ்தான் அணி 169 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது. எனினும், இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று, ஆப்கானிஸ்தான் அணியை ஆசிய கோப்பை தொடரின் குரூப் சுற்றுடன் வெளியேற்றியது.


Click it and Unblock the Notifications