Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட என்னம்மா நீ.. சிக்ஸர் மன்னன் ரிங்கு சிங்கை விட மாட்டாங்க போல இந்த ஆப்கன் ரசிகை

டெல்லி : கடந்த 2023 ஐபிஎல் தொடரை கலக்கிய இளம் வீரர் ரிங்கு சிங்கின் தீவிரமான ரசிகை ஒருவர் அவரை மறக்காமல் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி இருக்கிறார்.

அவர் வாழ்த்து கூறி பகிர்ந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Afghan girl Wazhma Ayoubi wish Rinku Singh on his birthday

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த வாஸ்மா அயூபி என்ற அந்த இளம் பெண் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக அறியப்படுபவர். அவர் அதிக பிரபலம் ஆக காரணமே இந்திய கிரிக்கெட் தான்.

இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் அடிக்கடி இவரை காணலாம். ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடும் போட்டியிலும் இவர் தன் அணிக்கு ஆதரவாக போட்டிகளை காண வருவார்.

ஆனால், விராட் கோலியின் தீவிர ரசிகையாக தான் முதலில் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார் வாஸ்மா அயூபி. பின்னர் இந்தியா ஆடும் பல கிரிக்கெட் போட்டிகளையும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரையும் காண தொடர்ந்து மைதானம் வந்தார்.

கேமராமேனும் மறக்காமல் இவர் பக்கம் சில வினாடிகளாவது கேமராவை திருப்புவார். அதனால் முதலில் மர்ம பெண் என அறியப்பட்ட வாஸ்மா, பின்னர் விராட் கோலியை நேரில் சந்தித்து அவரது ஜெர்ஸியை பரிசாக பெற்றார்.

அதன் பின் 2023 ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங், கடைசி ஓவரில் அடித்த ஐந்து சிக்ஸர் அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற வைத்து மொத்த ஐபிஎல் தொடரின் டிஆர்பியையும் ஏற்றி விட்ட போது, வாஸ்மா அயூபியும் அவரது தீவிர ரசிகையாகி விட்டார். அப்போதே அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ரிங்கு சிங் இன்று தன் 26வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரை மறக்காமல் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி இருக்கிறார் வாஸ்மா.

சமீபத்தில் நடந்த இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியை காணவும் நேரில் வந்திருந்தார். அப்போது தனது அணிக்கே அவர் ஆதரவு அளித்தார். எனினும், இந்தியா வென்ற பின் இந்திய அணிக்கு தன் வாழ்த்துக்களை கூறினார். இரண்டு அணிகளுக்கும் ரசிகையாக இருக்கிறார் வாஸ்மா அயூபி.

Story first published: Thursday, October 12, 2023, 20:26 [IST]
Other articles published on Oct 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+