Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உன் வேலையை பார்த்துட்டு போ! கோலி, ராகுலை அவமானப்படுத்திய ஆப்கான் வீரர்..இன்ஸ்டாவில் மோதல்!

லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டம் குறித்து தான் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் பேசி வருகிறார்கள். கால்பந்து சண்டையை மிஞ்சும் அளவிற்கு நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வீரர்களும் பெங்களூரு அணி வீரர்களும் மோதிக்கொண்டனர்.

இந்த நிலையில் விராட் கோலி கம்பீரை விட அதிக கவனம் ஈர்த்தவர் என்றால் அது ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் தான்.நேற்றைய ஆட்டத்தின் போது ஆடுகளத்தில் விராட் கோலி நடந்ததாக நடுவரிடம் புகார் கூறினார்.

Afghan player Naveen ul haq showing disrespects to virat kohli and kl rahul

அதற்கு மறுப்பு தெரிவித்த விராட் கோலி, ஷூ வை தூக்கி ஏதோ காட்டினார். இதனால் கடுப்பான நவீன் உல் ஹக், போட்டி முடிந்ததும் விராட் கோலி கையை பிடித்து மோதலில் ஈடுபடும் வகையில் பேசினார். இதற்கு விராட் கோலி பதிலடி கொடுத்தார். இதன் பிறகு தான் கோலியும் கம்பீரும் மோதிக்கொண்டனர். அதன் பிறகு விராட் கோலியிடம் நடந்தது குறித்து கே எல் ராகுல் கேட்டறிந்தார்.

பிறகு விராட் கோலியை சமாதானப்படுத்தும் வகையில் கே.எல் ராகுல் பேசினார். அப்போது அந்த வழியாக நவீன் உல் ஹக் வந்தார். இதனை பார்த்த கே எல் ராகுல் நவீன் உல் ஹக்கை அழைத்து விராட் கோலியிடம் பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுமாறு கூறினார். அதற்கு நவீன் உல் ஹக், உன் வேலையை பார்த்துட்டு போ என்பது போல் கையை காட்டி இருவரையும் அவமரியாதை படுத்திவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதனை பார்த்த ராகுல் மற்றும் விராட் கோலி அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நவீன் உல் ஹக் உங்கள் தகுதிக்கு ஏற்ப தான் அனைத்தும் கிடைக்கும். இப்படி தான் அனைத்தும் நடக்கும் என்று ஸ்டோரி போட்டுள்ளார். இது விராட் கோலியை மறைமுகமாக சீண்டும் வகையில் அமைந்திருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு பதிலடித்தரும் விதமாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில் நீங்கள் படிக்கும் அனைத்தும் வேறொருவரின் கருத்துக்கள். அதில் நிதர்சனம் இல்லை. நீங்கள் பார்க்கும் ஒவ்வொன்றும் உங்களுடைய கண்ணோட்டம் .அதில் உண்மை இல்லை என்று கூறி இருக்கிறார்.

Story first published: Tuesday, May 2, 2023, 15:38 [IST]
Other articles published on May 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+