Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையில் அதிர்ச்சி அளிக்குமா ஆப்கன்? ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் : ஆசியா கண்டத்தை சேர்ந்த ஆறு அணிகள் பங்குபெறும் ஆசிய கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்ஸில் தொடங்க இருக்கின்றன.

இந்தியா,இலங்கை,பங்களாதேஷ்,பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் 6ஆவதாக பங்குபெறும் அணிக்காக தகுதி போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டிகளுக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

afghan squad announced


ஆப்கானிஸ்தான் அணி கோப்பை வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்றாலும் கூட சில அதிர்ச்சியளிக்கும் வெற்றிகளை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

ஆப்கானிஸ்தான் அணி சமீபத்தில் அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணியில் தவலத் சடறான் அணியில் இடம்பெறவில்லை. சயீத் சீர்சாத்,முனிர் அஹமத் மற்றும் வபாடார் ஆகியோர் அறிமுக வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒருநாள் போட்டி தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருக்கும் ரஷீத் கான் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பணமாக இருப்பார்.

ஆஸ்கர் ஆப்கான் தலைமையில் 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி விவரம்:

ஆஸ்கர் ஆப்கான்(கேப்டன்),முகமத் ஷாஷாட்,இஷனுல்லா ஜனட்,ஜவேட் அகமதி,ரஹமத் ஷா,ஹாஷிமாத் ஷாஹிடி,முகமத் நபி,குல்படின் நைபி,ரஷீத் கான்,நஜிபுல்லா சடறான்,முஜீப் உர் ரஹ்மான்,அப்டாப் ஆலம்,சாமியுல்லா ஷென்வரி,முனிர் அஹமத் ககர்,சயீத் அஹமத் ஷிர்சாத்,ஷரபுதின் அஷ்ரப்,வபாடார்


Story first published: Sunday, September 2, 2018, 18:08 [IST]
Other articles published on Sep 2, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+