Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஓவரில் 6 சிக்ஸ்.. யுவராஜ் சிங்கின் 2 சாதனைகளை சமன் செய்த ஆப்கன் பேட்ஸ்மேன்

Recommended Video

யுவராஜ் சிங்கின் 2 சாதனைகளை சமன் செய்த ஆப்கன் பேட்ஸ்மேன்- வீடியோ

ஷார்ஜா : ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஐபிஎல் போன்றே பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்கள் பல்வேறு அணிகளில் இணைந்து ஆடி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானின் ஜஜாய் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்ததோடு, அதிவேக அரைசதம் அடித்தும் சாதனை செய்தார்.

ஆப்கன் வீரர் ஜஜாய் அசத்தல்

ஆப்கன் வீரர் ஜஜாய் அசத்தல்

இருபது வயதே ஆன ஆப்கன் வீரர் ஜஜாய் காபுல் ஸ்வாணன் அணிக்காக ஆடி வருகிறார். இந்த தொடர் முழுவதும் அதிரடி பேட்டிங் திறனை வெளிப்படுத்தி வரும் இந்த இளம் வீரர், பல்க் லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து பட்டையைக் கிளப்பினார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

முதலில் ஆடிய பல்க் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 244 ரன்கள் குவித்து பெரிய இலக்கை நிர்ணயித்தது. கிறிஸ் கெயில் 48 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தது பல்க் அணியின் ஸ்கோரை உயர்த்த முக்கிய காரணமாக அமைந்தது. அதை எதிர்த்து ஆடிய காபுல் அணியில், துவக்க வீரராக இறங்கிய ஜஜாய் நான்காவது ஓவரை சந்தித்தார். அந்த ஓவரை ஆப்கன் வீரர் அப்துல்லா மசாரி வீசினார்.

ஒரே ஓவரில் பறந்த 6 சிக்ஸர்கள்

ஒரே ஓவரில் பறந்த 6 சிக்ஸர்கள்

அதற்கு முன்பே 7 பந்துகளில் 21 ரன்கள் அடித்து இருந்த ஜஜாய், இந்த ஓவரில் வீசப்பட்ட ஒரு வையிடு தவிர்த்து மற்ற அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பினார். இதன் மூலம் இந்த ஓவரில் மட்டும் 37 ரன்கள் கிடைத்தது. மேலும், ஜஜாய் 12 பந்துகளில் 50 ரன்கள் அடித்து டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை யுவராஜ் சிங் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோரோடு பகிர்ந்து கொண்டார்.

இரண்டு சாதனைகள்

இரண்டு சாதனைகள்

யுவராஜ் சிங்கின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் சாதனை மற்றும் அதிவேக அரைசதம் அடித்த சாதனையையும் சமன் செய்துள்ளார் ஜஜாய். ஜஜாய் சாதனைகள் செய்தாலும், அவர் பங்கேற்ற காபுல் அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஜஜாய் 17 பந்துகளில் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Story first published: Monday, October 15, 2018, 12:48 [IST]
Other articles published on Oct 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+