சர்வதேச கிரிக்கெட்டில் அதிர்ச்சி.. இலங்கையை துவம்சம் செய்த ஆப்கானிஸ்தான்.. அபார ஆட்டம்
ஹம்பன்தோட்டா : இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஹம்பன்தோட்டாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கருணரத்னே 4 ரன்களில் ஆட்டமிழக்கக, குசேல் மெண்டிஸ் 11 ரன்களிலும், ஆஞ்சிலோ மேத்தீஸ் 12 ரன்களிலும் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான நிசாங்கா மட்டும் 38 ரன்கள் சேர்த்தார்.

84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறிய போது அசலங்கா, தனஞ்செய்ய டி சில்வா ஆகியோர் கூட்டணி அமைத்து ரன்களை சேர்த்தனர். இதில் தனஞ்செய்யா 51 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை விளையாடிய அசலங்கா 91 ரன்கள் சேர்த்தார்.இறுதியில் ஹேமந்தா 22 ரன்கள் சேர்க்க, சிஎஸ்கே வீரர் பதிராணா ஒரு ரன்னில் ரன் அவுட் ஆனார்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 268 ரன்கள் சேர்த்தது. 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 14 ரன்களில் வெளியேற, 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இப்ராஹிம் சாட்ரன் மற்றும் ரஹ்மத் ஷா ஆகியோர் அதிரடியாக விளையாடி 146 ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக விளையாடிய இப்ராஹிம் சாட்ரன் 98 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்து, 2 ரன்களில் சதத்தை தவறவிட்டார். ரஹ்மத் ஷா 55 ரன்களில் வெளியேற, ஹசமுத்துலா 38 ரன்கள் சேர்த்தார். இறுதியில் முகமது நபி 27 ரன்கள் சேர்த்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 46.5வது ஓவரில் 4 விக்கெட்டுகளை எல்லாம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இரு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 8 முறை மோதிய நிலையில், ஆப்கானிஸ்தான் 3 முறை இலங்கையை வீழ்த்தி அசத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications