Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கடும் பிரச்னைக்கு இடையே உலக சாதனை” பிரமிப்பூட்டிய ஆஃப்கான் வீரர் ரஷித் கான்.. ரசிகர்கள் பாராட்டு!

அமீரகம்: டி20 கிரிக்கெட்டில் லசித் மலிங்காவின் நீண்ட வருட சாதனையை ரஷித் கான் முறியடித்ததற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Recommended Video

Rashid Khan joins the 100 T20I wicket club | OneIndia Tamil

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இரு அணிகளுக்குமே அமீரகம் 2வது ஹோம் கிரவுண்டாக பார்க்கப்படுவதால் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்றது.

பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான் வெற்றி

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்களை மட்டுமே எடுத்தது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதலில் தடுமாறிய போதும், இறுதியில் சிறப்பாக விளையாடி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

புதிய சாதனை

புதிய சாதனை

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றபோதும், ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் தான் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். இதற்கு காரணம் அவர் செய்த பெரும் சாதனை. அதாவது நேற்றைய போட்டியில் ரஷித் கான் 2 விக்கெட்களை சாய்த்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

 மலிங்கா சாதனை முறியடிப்பு

மலிங்கா சாதனை முறியடிப்பு

இதற்கு முன்னர் இலங்கை முன்னாள் வீரர் லசித் மலிங்கா 76 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது வெறும் 53 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி ரஷித் கான் அசத்தியுள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் வெறும் 23 வயதில் ரஷித் கான் இந்த சாதனையை படைத்துள்ளார்.

மற்றொரு சாதனை

மற்றொரு சாதனை

இந்த சாதனை மட்டுமின்றி மற்றொரு பெருமையும் ரஷித் கானுக்கு வந்து சேர்ந்துள்ளது. அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் ரஷித் கான் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் 117 விக்கெட்டுடன் முதலிடத்திலும், மலிங்கா 107 விக்கெட்டுகளுடன் 2வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 30, 2021, 21:28 [IST]
Other articles published on Oct 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+